டெங்கு கொசுவை கட்டுப்படுத்தும் மீன்கள்!

Fish that control the dengue mosquito.
Fish that control the dengue mosquito.

ழைக்காலம் தொடங்கி விட்டதால் டெங்கு காய்ச்சல் பரவலினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசுக்களை கட்டுப்படுத்தும் கம்போசியா என்ற ஒரு வகை மீன் இனத்தை வளர்க்கும் திட்டத்தை புதுச்சேரி சுகாதாரத்துறை செயல்படுத்த உள்ளது.

மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் டெங்குக் காய்ச்சல் ஏடிஸ் என்ற ஒரு வகை கொசுவால் அதிகமாகப் பரவுகிறது. இந்தக் காய்ச்சலுக்கு தற்போது வரை முறையான சிகிச்சை இல்லை என்பதால் காய்ச்சல் வருவதற்கு முன்பே தடுப்பது அவசியமாகும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலர் இதுவரை டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து டெங்குவின் பாதிப்பு எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது.

டெங்குவை பரப்பும் கொசுக்கள் நல்ல நீரில் முட்டையிட்டு அதிகமாகப் பெருகும். எனவே, பொதுமக்களாகிய நாம் சுற்றுப்புறங்களில் தண்ணீரை தேங்க விடாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். கொசு உற்பத்தியை குறைப்பது மூலமாகவே டெங்கு பாதிப்பை நம்மால் குறைக்க முடியும். 'கம்போசியா' என்ற ஒரு வகை மீன் இனம் கொசுக்களின் முட்டையை உண்டு வாழும் இனமாகும். இந்த வகை மீன்களை நல்ல நீர் உள்ள நீர்நிலைகள் மற்றும் கிணறுகளில் விடும்போது, அவை டெங்கு நோயை ஏற்படுத்தும் கொசுக்கள் இடும் முட்டைகளைத் தின்றுவிடுவதால், அவை கட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

இந்த மீன் பார்ப்பதற்கு நெத்திலி மீனைப் போலவே இருக்கும். ஆனால், இவை பொதுமக்கள் சாப்பிட உகந்தவை அல்ல. இந்த வகை மீன்களை நீர் தேங்கியுள்ள இடங்கள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் போன்ற இடங்களில் விட்டால் அதில் உள்ள கொசுப் புழுக்களை உண்டு வாழும். அதேபோல, குளங்களிலும், தொட்டிகளிலும் உள்ள அசுத்தங்களை இது சுத்தம் செய்யும். இவை இருந்த இடங்களில் நீர் வற்றிப்போனாலும் அதன் முட்டைகள் நிலத்தில் இருக்கும் என்பதால் மீண்டும் நீர் சேர்ந்தவுடன் அவை பொறித்து மீன்கள் வெளிவரும். இந்த வகை மீன்களால் டெங்குவைப் பரப்பும் கொசுக்களை வெகுவாகக் கட்டுப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com