இந்தியாவில் தேயிலை சாகுபடி அதிகரிப்பு!

இந்தியாவில் தேயிலை சாகுபடி அதிகரிப்பு!

டப்பு ஆண்டில் இந்தியாவில் தேயிலை உற்பத்தி அதிகரித்து இருப்பதாகத் தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் டீ, காபி பிரியர்கள் அதிகம். அதனால் தேயிலையின் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் தேயிலை உற்பத்தி அதிகரித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், ‘இந்தியாவில் நடப்பு ஆண்டின் ஜூலை மாதத்தில் தேயிலையின் மொத்த உற்பத்தி 16.5 கோடி கிலோவாக உயர்ந்திருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டில் 15.53 கோடி கிலோ மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 6.2 சதவீதம் உற்பத்தி வளர்ச்சியை கண்டுள்ளது.

குறிப்பாக, வட இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் தேயிலை உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன. மேலும், வட மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 14.31 கோடி கிலோ தேயிலை நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டில் 13.58 கோடி கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவை பொறுத்தவரை 2022ம் ஆண்டு 1.95 கோடி கிலோவாக உற்பத்தி இருந்தது. தற்போது 2.2 கோடி கிலோவாக இந்த உற்பத்தி உயர்வைக் கண்டிருக்கிறது. அதிலும், சிறு குறு நடுத்தர தேயிலை விவசாயிகள் நடப்பாண்டில் அதிக அளவிலான தேயிலை உற்பத்தியை செய்து இருக்கின்றனர். இவ்வாறு 50.9 சதவீதம் உற்பத்தி செய்துள்ளனர். இது கடந்த ஆண்டில் 50.2 சதவீதமாக இருந்தது.

தற்போது இந்தியாவின் மலைப்பகுதிகளில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாக மாறி இருக்கிறது. இதனால் தேயிலை விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்து இருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com