மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் தாவரப்பால்!

மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் தாவரப்பால்!

சும்பால், ஆவின் பால் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அது என்ன தாவரப்பால் என்றுதானே யோசிக்கிறீர்கள்? நம் வீட்டில் இருக்கிற இயற்கைப் பொருட்களில் இருந்து எடுக்கப்படும் சத்து மிகுந்த எளிதான பால்தான் தாவரப் பால் ஆகும். உடல் நலம் வேண்டுபவர் தினமும் இந்தப் பாலை அருந்த வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இந்தப் பாலில் இருக்கும் லாக்டோஸ், கொலஸ்ட்ரால், குளுட்டன் போன்ற சத்துகள் சில வயதானவர்களுக்கு செரிமானப் பிரச்னையைத் தருவதால் அவர்கள் இந்தப் பாலைத் தவிர்ப்பதுண்டு. சமயங்களில் சிறியவர்களுக்கும் இந்தப் பாலினால் ஒவ்வாமை ஏற்படுவதுண்டு.

இவர்களுக்காகவே உள்ளதுதான் கசகசா, பாதாம், முந்திரி, தேங்காய், சோயா மற்றும் கோதுமை, அரிசி போன்ற தானியங்களிலிருந்து எடுக்கப்படும் தாவரப்பால் வகைகள். பெரும்பாலும் இவற்றை ஊறவைத்து நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி அதில் சர்க்கரை, தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்துவது வழக்கம். இதனால்  உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

பொதுவாக, வயிற்றுப்புண், வாய்ப்புண் உள்ளவர்கள் கசகசாவை அரைத்துப் பால் எடுத்து குடித்தால் குணமாகும் என்று சொல்வார்கள். அதேபோல், தேங்காய்ப்பால் அருந்துதலும் வாய் புண் வராமல் தடுக்கும். இதேபோல், பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு நிவாரணம் தருபவையாக இந்தப் பால் வகைகள் உள்ளன. சோயா பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் சோயா பால், பருத்திப் பால் எனவும் இப்போது அதிக அளவில் குடித்து வருகிறோம். இதில் சோயா பால் தயாரிக்க ஒரு கப்பில் ஒன்பது கிராம் வரை சோயா பீன்ஸ் எடுத்து அரைத்து வடிகட்டி பாலாகக்  குடிக்கலாம். சோயா பாலில் புரோட்டின் சத்து, கால்சியம், வைட்டமின் பி12 அதிக அளவில் உள்ளதாக உணவு வல்லுநர்கள் கூறுகின்றனர். செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் சாதாரணமாக நாம் அருந்தும் பாலுக்கு மாற்றாக இதுபோன்ற தாவரப் பால்களை எடுத்துக் கொள்ளும்போது அவர்களின் ஜீரண சக்தி சீராகி, இதயம் மற்றும் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் பல வகையான தாவர வகைப் பால்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. எனினும், 13ம் நூற்றாண்டில்தான் இதன் மீதான கவனம் அதிகமாகி, ‘தாவரப் பால்’ என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வகை பால்கள் சைவப்பால், விலங்குபால் இல்லாத பால், பால் பதிலிகள் என்று பலவாறாக அழைக்கப்படுகிறது. இதுபோன்ற பல சிறப்புகள் பெற்ற தாவர வகைப்பால்கள் குறித்த விழிப்புணர்வுகளை அறிவதோடு, அவற்றை அருந்தி உடல் நலம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com