பூச்சிகளை சாப்பிடும் செடிகள்!

பூச்சிகளை சாப்பிடும் செடிகள்!

சில வகை பூச்சிகள் இலைகளை, செடிகளை சாப்பிடுவது தெரியும். ஆனால், சில வகை செடிகள் பூச்சிகளை சாப்பிடுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? Sundew, Vessel plant, Venus fly- trap போன்ற செடிகள் (மாமிசம் உண்ணும் தாவரங்கள்) வகையைச் சேர்ந்தவை. இவை சதுப்பு நிலங்களில் வளர்பவை. சேரும் சகதியும் உள்ள பகுதியில் இவற்றின் வேர்கள் ஆழமாகப் போகாது. அதனால் காற்றில் உள்ள நைட்ரஜன் வாயுவை நைட்ரேட் ஆக மாற்றும் பாக்டீரியாக்களும் அதன் வேர்களில் இருக்காது.

நைட்ரேட்ஸ் (Nitrates) மற்றும் நீர் இல்லாமல் இந்த தாவரங்கள் மற்ற தாவரங்களைப் போல ஒளிச்சேர்க்கை (Photo Synthesis) மூலமாக உணவு தயாரிக்க முடியாது. எனவேதான் சிலவகை பூச்சிகளைப் பிடித்து உண்ணுகின்றன. அதற்கேற்ப இவற்றில் பூவை போல தோற்றமளிக்கும் பாகம் ஒன்று காணப்படும். எடுத்துக்காட்டாக Sundewவின் தோற்றம் சூரியகாந்திப் பூவை போல இன்னும் பளபளப்பாக இருக்கும்.

இதை பூ என்று நினைத்து இதன் மையத்தில் வந்து அமரும் வண்டுகள், பூச்சிகள் இந்தப் பூவின் பளபளப்பான பிசுபிசுப்பான ஒருவித திரவத்தில் ஒட்டிக் கொள்கின்றன. உடனே சுற்றி இருக்கும் இதழ்கள் மூடிக்கொண்டு ஒருவித ரசாயனத்தை சுரக்கின்றன. அதில் அந்தப் பூச்சிகள் இறந்து கரைந்து விடுகின்றன. இதன் மூலம் பூச்சிகளின் உடலில் இருக்கும் நைட்ரஜனும் மற்ற சத்துக்களும் இந்த செடியால் உறிஞ்சப்படுகின்றன.

இன்னும் சில செடிகளில் இந்தப் பூ போன்ற அமைப்பு ஒரு குழல் போல மேலே இதழ்களுடன் இருக்கும். இதழ்கள் மேலே வந்து அமரும் பூச்சி வழுக்கி குழலுக்கள் விழுந்து அடிப்பாகத்துக்குப் போய்விடும். அங்கே இது செரிக்கப்பட்டு விடும். இலைகளும், வேர்களும் இல்லாத தாவரங்களின் உணவுக்கும் இயற்கை ஒரு வழியை வகுத்து வைத்து இருப்பது அதிசயம் அல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com