இந்திய கடற்பரப்பில் அதிகம் காணப்படும் பிளாஸ்டிக் கழிவு!
இந்திய கடற்பரப்பான மன்னார் வளைகுடா பகுதியில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுவதாக குற்றம் சட்டப்படிகிறது.
கடல் பல்வேறு அற்புதங்களை கொண்ட மிகப்பெரிய தண்ணீர் பரப்பு. கடலில் எண்ணற்ற வகையிலான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் இந்திய கடல் பரப்பு பகுதியான மன்னார் வளைகுடா பகுதியில் அதிக அளவிலான கடல் குப்பைகள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியான ரோஜ்மா நகர் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பரப்பு மன்னார் வளைகுடா பகுதி என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் பவளப்பாறைகள், கடல்பாசிகள், எண்ணற்ற அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.
இந்த சிறப்பு வாய்ந்த கடல் பகுதியில் தற்போது அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் நிலை தற்போது அதிகரித்திருக்கிறது.
அந்தப் பகுதியில் பல்வேறு வகையான படகுகளில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் வீசிச் சொல்லும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் ஆகியவை கடலுக்கு அடியில் பவளப்பாறையோடு படிந்து விடுகின்றன. அதை அறியாமல் உட்கொள்ளும் கடல்வாழ் அறிய வகை உயிரினங்கள் உயிரிழக்கிறது.
மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பரப்பில் 21 சிறிய குறுந்தீவுகள் காணப்பட்டன. தற்போது 20 தீவுகள் மட்டுமே உள்ளன. பூவரசன் பட்டி எனும் தீவு அழிந்து இருக்கிறது. மேலும் தனுஷ்கோடியும் வெள்ளத்தில் மூழ்கி அழிந்து தீவாகும். தற்போது தனுஷ்கோடி ஒரு சுற்றுலாத்தலமாக இருப்பதற்கு முக்கிய காரணமே அழிவின் மிச்சங்கள் காட்சி அளிப்பதனாலேயே.
இப்படி பல்வேறு வகையான பிரச்சனைகளை சந்தித்து வரும் வண்ணார வளைகுடா நீர்ப்பரப்பில் தற்போது பிளாஸ்டிக் கழிவுகளும் ஆபத்தாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் அந்த பகுதி மக்களின் கோரிக்கை என்பது மன்னார்க வளைகுடா பகுதியில் ஆழ்கடலில் படிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதே.