
இந்தியாவில் மட்டும், உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட மாசு வரம்பை மீறிய பகுதிகளில், சுமார் 1.3 பில்லியன் மக்கள் வாழ்வதாக சிகாகோ பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இதில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரங்களில் இந்தியாவின் தலைநகரான டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த காற்று மாசு வரம்பை மீறி, இங்கு அதிகம் மாசு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் சுமார் 1.3 பில்லியன் மக்கள் நிர்ணயிக்கப்பட்ட மாசு வரம்பை மீறிய பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் அதிகம் மாசுபட்ட இடங்களில் வாழ்வதாக அமெரிக்காவைச் சேர்ந்த சிகாகோ பல்கலைக்கழகம் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதேபோல, இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 67 சதவீதம் பேர் இந்தியாவின் காற்று தரம் அளவீட்டைத் தாண்டிய பகுதிகளில் வாழ்கிறார்கள் என்பதையும் இந்த பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள காற்று மாசு வரம்பை மீறியுள்ளதால், அப்பகுதியில் வாழும் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 5 ஆண்டுகள் வரை குறையும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் மிகவும் மாசடைந்த நகரமாக இருப்பது டெல்லிதான். அங்கு தொடர்ந்து காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் டெல்லியில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் 11 ஆண்டுகள் வரை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லியிலேயே குறைந்த மாசடைந்த இடமாக இருப்பது பதான்கோட் பகுதிதான். ஆனால், அங்கேயும் உலக சுகாதார அமைப்பின் காற்று மாசுபாட்டு வரம்பை விட ஏழு மடங்கு அதிகமாக உள்ளது. அந்தப் பகுதியில் இதே நிலை நீடித்து வந்தால் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்நாளில் 3 ஆண்டுகள் வரை இழப்பார்கள் என அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இந்நகரங்களில் அதிகப்படியான காற்று மாசுபாடு ஏற்படுவதற்கு மனித செயல்பாடுகள்தான் முக்கியக் காரணம் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்களும், இந்திய அரசாங்கமும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் எதிர்காலத்தில் இது மிகப்பெரிய விளைவுகளைக் கொண்டு வரலாம்’ என்றும் சிகாகோ பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.