ட்ரெண்டாகும் கொண்டைகள். எந்த இடத்திற்கு எந்த ஹேர்ஸ்டைல்!

கொண்டை
கொண்டைVijay Kumar

பெண்கள் எந்த அழவிற்கு அழகாக இருக்கிறார்களோ அதை எடுப்பாக காண்பிக்க அவர்களது ஹேர் ஸ்டைல் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படி நகை, மேக்கப் கூடுதல் அழகு சேர்க்கிறதோ, ஹேர் ஸ்டைலும் ஒரு அழகுதான்.

முந்தைய காலங்களில் எல்லாம் பெண்கள் நீண்ட கூந்தல் வைத்துக் கொண்டு எப்போது பிண்ணிய படியே திரிவார்கள். வீட்டில் இருந்தால் கொண்டை இது தான் அந்த காலத்து பெண்களின் ஹேர் ஸ்டைல். தற்போது பெண்கள் அதிகம் விரும்புவது ஷார் ஹேர் தான். முடியை பராமரிப்பது என்பது இன்றைய காலத்து பெண்களிடம் கிடையாது. அதனாலேயே பலரும் ஷார்ஹேர் வைத்து சுற்றுகிறார்கள்.

அதுவும் பெண்களின் தற்போதைய பேவரைட் ஹேர்ஸ்டைல் என்னவென்றால் ஃப்ரீ ஹேர்ஸ்டைல். தலையை வாருவதை பெரும்பாலான பெண்கள் தற்போது தவிர்த்து வருகின்றனர். முடியை கைகளாலேயே சீவி, விரித்து போட்டு தான் சுற்றுகிறார்கள். ஆனாலும் சில இடங்களுக்கு சென்றால் என்ன ஹேர் ஸ்டைல் வைக்கலாம் என குழம்புகிறார்கள். அதுவும் குறிப்பாக திருமணம் போன்ற விஷேசங்களுக்கு சென்றால் என்ன ஹேர் ஸ்டைல் வைக்கலாம் என்பது பெண்களின் பெரிய தலைவலியாக உள்ளது. இந்த நிலையில் தலையை விரிப்பதை தொடர்ந்து பெண்கள் கொண்டை வகைகளை அதிகம் விரும்புகின்றனர். எளிதாக போடப்பட்டும் இந்த கொண்டைகள் பல வகைகளாக பெண்கள் போடுகின்றனர். இதற்கு செல்லமாக பண் என்றும் பெண்கள் அழைக்கிறார்கள். அப்படி எந்த இடத்திற்கு எந்த மாதிரி ஹேர்ஸ்டைல் போடலாம் என பார்க்கலாம்.

பன் கொண்டை:

ல்லா வயது பெண்களுக்கும் பொருந்தக்கூடிய எளிமையான கொண்டை வகை இது. பார்ட்டிகளுக்கும், பயணங்களுக்கும், அலுவலக நிகழ்ச்சிகளுக்கும் இந்த வகை கொண்டை அலங்காரம் ஏற்றதாக இருக்கும். திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது பன் கொண்டையில் பூக்கள் மற்றும் அணிகலன்கள் கொண்டு அலங்கரித்தால் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்.

டாப் பன் கொண்டை:

டாப் பன் கொண்டை அலங்காரம் பார்ட்டிகள், திருமண வரவேற்புகள் மற்றும் மேற்கத்திய பின்னணி கொண்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக் கொள்ள சரியான தேர்வாகும். நீளமான முடி கொண்ட பெண்களுக்கு இந்த வகை கொண்டை அழகுக்கு அழகு சேர்க்கும்.

லோ பன் கொண்டை:

னமான அலங்காரப் பொருட்கள் இல்லாமல் எளிமையாக செய்யப்படும் இந்த வகை கொண்டை அலங்காரம், திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அல்லது சாதாரண, பண்டிகை நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு ஏற்றது.

வழக்கமான கொண்டை:

ண்டிகைகள் மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள இது சரியான தேர்வாகும். கவுன்கள் மற்றும் முழங்கால் வரையிலான ஆடைகள் அணியும்போது இந்த வகையான சிகை அலங்காரம் கூடுதல் அழகு சேர்க்கும். ஓவல், வட்டம் மற்றும் வைர வடிவ முகத்தோற்றம் கொண்ட பெண்கள் நவீன இந்திய கொண்டை அலங்காரத்தை தேர்வு செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com