
அமைதியாக இருங்கள். குழந்தையிடம் தென்படும் பருவ மாற்றங்களை கவனியுங்கள். நீங்கள் பார்க்கும் அத்தனையும் வளர்ச்சியின் அறிகுறியே. பதற்றப் படாதீர்கள்.
திறந்த மனதுடன் இருங்கள். முன் அனுமானங்கள் வேண்டாம். அப்படி செய்கிறாய் இப்படி செய்கிறாய் என புகார் வாசிக்காதீர்கள்.
பேசுவதைக் குறைத்து கேட்பதை அதிகப்படுத்துங்கள். குழந்தை பேசும்போது மரியாதையுடனும் கனிவுடனும் கவனியுங்கள். அப்போது அது தொடர்ந்து பேசும்.
குழந்தையின் நண்பர்களை விமர்சிக்காதீர்கள். தோற்றம், பொருளாதார நிலை, சமூகப் பின்னணி என எது குறித்தும் தாழ்வாகப் பேசாதீர்கள்.
உங்களுக்கு பிடிக்காது என்பதற்காகவோ, பணம் இல்லை என்பதற்காகவோ குழந்தையின் எந்த திறமை யையும் மட்டம் தட்டாதீர்கள். குற்றம் சுமத்தாதீர்கள்.
தோற்றத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் அளிப்பார்கள். அதில் ஒரு தவறும் இல்லை.
குழந்தை பொய் சொன்னால் அதற்கு நீங்களே காரணம்.
குழந்தைகள் முன் பெற்றோர்களாகிய நீங்கள் சண்டை போடாதீர்கள், கெட்ட விஷயங்களையோ, கெட்ட வார்த்தைகளையோ பயன்படுத்தாதீர்கள்.
குழந்தையுடன் நேரம் செலவழியுங்கள். பொருட்களால் அன்பை ஈடு செய்யாதீர்கள். பயணம் செய்யுங்கள் விளையாடுங்கள்.
எதிர்த்துப் பேசக் கூடாது, கோபப்படக் கூடாது, மரியாதை தர வேண்டுமென நீங்கள் குழந்தையிடம் எதிர்பார்த்தால், அதை முதலில் நீங்கள் பின்பற்றுங்கள்.