ரத்தத்தை சுத்தம் செய்யும் ஐந்து அதிசய பானங்கள்! 

ரத்தத்தை சுத்தம் செய்யும் 5 அதிசய பானங்கள். 
ரத்தத்தை சுத்தம் செய்யும் 5 அதிசய பானங்கள். 

மது உடலில் உள்ள ரத்தம் சிறப்பாக செயல்பட்டால்தான் நமது உடல் உறுப்புகள் எல்லாம் சிறப்பாக செயல்படும். எனவே நம்முடைய ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் தற்போதைய மோசமான உணவு பழக்கங்களால் ரத்தத்தில் அதிகமான நச்சுக்கள் சேர்ந்துவிடுகிறது. 

என்னதான் நம்முடைய உடலில் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் இயற்கையாகவே இரத்தத்தை சுத்தம் செய்தாலும், அவற்றால் மட்டுமே முழுமையாக ரத்தத்தை சுத்திகரிக்க முடியாது. எனவே ரத்தத்தை சுத்திகரிக்க இயற்கையாக ஒரு சில பானங்களை நாம் குடிக்க வேண்டும். 

தண்ணீர்- நமது நச்சுக்களை உடலிலிருந்து நீக்குவதற்கான சிறந்த பானம் தண்ணீர் தான். இது நம்முடைய தாகத்தை தணிப்பது மட்டுமின்றி ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும் உதவுகிறது. மேலும் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தி அதை நன்றாக இயங்க வைக்கிறது. எனவே ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் அதிகப்படியான தண்ணீர் குடியுங்கள். 

துளசி நீர்- துளசி இலைகள் மிகவும் புனிதமானது. அதில் ஆண்ட்டி பாக்டீரியா மற்றும் அழர்ச்சியை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இதை தினசரி காலையில் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். 

மஞ்சள் பால்- மஞ்சள் மிகவும் சத்து நிறைந்த மற்றும் அதிகப்படியான மருத்துவப் பண்புகளைக் கொண்டது. கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்ட மஞ்சள், நமது ரத்தத்தை சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது. இதற்கு மஞ்சளில் உள்ள குருக்குமின் என்ற அதிசயப் பொருள் தான் காரணம். மேலும் இது நம்முடைய ரத்தத்தின் சிவப்பு அணுக்களை அதிகரிக்கவும் உதவுகிறது. இப்படிப்பட்ட மஞ்சள் தூளை வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்து தினமும் குடித்தால், ரத்தம் சுத்தமாவதோடு கல்லீரல் செயல்பாடும் அதிகரிக்கும்.

எலுமிச்சை ஜூஸ்- நாம் அனைவருக்குமே தெரியும் வெயில் காலத்தில் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் எவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்குமென்று. அது நம்முடைய தாகத்தை தணிப்பது மட்டுமின்றி, நமது செரிமானத்தைத் தூண்டவும் உதவுகிறது. இதில் அமிலத்தன்மை இருப்பதால் வயிற்றில் உள்ள வைரஸ்களை அழித்துவிடுகிறது. ஆகவே இரத்தம் சுத்தமாக இருக்க வேண்டுமெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். 

ஆப்பிள் சீடர் வினிகர்- தினமும் ஆப்பிள் சீடர் வினிகர் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், அது நமது உடலின் pH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. இது நம்முடைய ரத்தத்தில் இருக்கும் யூரிக் அமிலத்தை நீக்குவதால், ரத்தம் தூய்மையடைகிறது. 

இந்த ஐந்து பானங்களும் ஒருவருடைய ரத்தத்தை தூய்மை செய்யும் அற்புதமான பானங்களாகும். இவற்றை தினசரி அருந்த முயற்சி செய்யுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com