தயிர் சாத பிரியரா நீங்க? அப்போ அதுல இருக்கிற நன்மைகள தெரிஞ்சுக்கோங்க!

தயிர் சாதம்
தயிர் சாதம்

இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றான தயிர் சாதத்தில் பல ஊட்டச்சத்து நன்மைகள் நிரம்பியுள்ளது.

தயிர் சாதம் பொதுவாகவே பலருக்கும் பிடிக்கும். பெண்கள் வீட்டில் செய்ய எளிமையானதாகவும் இருக்கும். இது போக உடல் நிலை சரியில்லாத போது, ட்ராவலிங் போது தயிர் சாதமே சிறந்ததாகும். தயிர் சாதத்தை விரும்பாதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை.

அப்படிப்பட்ட தயிர் சாதத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..

இது கார்போஹட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைக்கும் ஒரு ஆரோக்கியமான உணவாகும்.

கால்சியத்தை வழங்கும் தயிர் மற்றும் அரிசி கலவையானது வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை ஊக்குவிக்கிறது.

தயிர் சாதத்தால் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை ஊக்குவிக்கும் புரோபயாடிக்குள் உள்ளன.

தயிர் சாதத்தில் கலோரிகள் குறைவாகவும் புரதச்சத்து அதிகமாகவும் உள்ளதால் எடை இழப்புக்கு உணவாக உள்ளது.

தயிர் சாதத்தில் உள்ள தயிர் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது மற்றும் வயிற்றை சாந்தப்படுத்த உதவுகிறது.

தயிர் சாதத்தில் உள்ள புரோபயாடிக்குகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், தொற்றுநோய்களை எதிர்த்து போராடவும் உதவுகின்றன.

தயிர் சாதம் வயிற்றுக்கு மென்மையான இருப்பதால் இது செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com