அழகே வா! அழகு டிப்ஸ்கள்!

அழகே வா! அழகு டிப்ஸ்கள்!

வெங்காயச் சாறைத் தலையில் தேய்த்து ஊறியபின் குளித்தால் பொடுகு, சிரங்கு நீங்கி தலை குளிர்ச்சி தரும். டீத் தண்ணீரைத் தலையில் தேய்த்துக்கொண்டு குளிப்பதால் தயிர் நீண்டு வளரும்.

சுத்தமான தேங்காயெண்ணெயே தலைக்கு நல்லது. கூந்தலுக்கு அடிக்கடி ஸ்ப்ரே போடுவது நல்லதில்லை. கூந்தலை அடிக்கடி சுத்தமான நீரில் கழுவிக் காய விடவேண்டும். கூந்தல் நரைக்காமலிருக்க கருவேப்பிலை துவையல்,  வெங்காயம், கீரை, பசும்பால், பூசணிக்காய் சேர்த்துக்கொள்ளவும்.

காலை வெயிலில் தலையை அவிழ்த்துக்கொண்டு சூரிய வெளிச்சம் படும்படிச் செய்யவும். தலைக்கு சோப்பு, ஷாம்பு போடுவதைவிட சிகைக்காய்த்தூள் தேய்த்துக் குளிப்பதே நல்லது.

லைமயிர் நீண்டு வளர சுலபமாக வீட்டில் தயாரிக்கும் தைலம்- ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, மருதோன்றி இலை, கடுக்காய், நெல்லி, முள்ளீ, ஒரு துண்டு வசம்பு வெந்தயம் இவைகளை வெயிலில் காய வைத்து ரவைபோல் இடித்துக்கொள்ளவும்.

வாசனைக்குப்  பூலாங்கிழங்கு சேர்த்துக்கொள்ளலாம். தேங்காயெண்ணெயில் இந்தக் கலவைப்  பொடியைப் போட்டு வெயிலில் நான்கு நாட்கள் காய வைக்கவும். அத்துடன் சுருள்  பட்டை என்று மருந்துக்கடையில் விற்கும். அதைச் சேர்த்துக்கொண்டால் சிவப்பு நிறமாகும். இதை மெல்லிய துணியில் வடிக்கட்டி சீசாவில் வைத்துக் கொண்டு உபயோகிக்கவும். கற்பூரத் துண்டத்தை எண்ணெயில் போட்டு வைத்தால் காரல் வாசனை எடுக்காது.

முகம் பளபளப்பாக இருக்க அதிகமான  காஸ்மாடிக்ஸ் உபயோகிக்காமல் இருப்பது  நல்லது. கூடிய மட்டும் பௌடர், ஸ்னோ போடுவதைத் தவிர்க்கவும். முகம் இளமையாக இருக்க விளக்கெண்ணெய் உபயோகிப்பது நல்லது பலருக்கு இது அருவருப்பாகப் படலாம். ஆனாலும் இப்போது கடைகளில் நல்ல விளக்கெண்ணெய் மலிவாகக் கிடைப்பதால் உபயோகிப்பது சுலபம்.

டுக்குமுன் விளக்கெண்ணெயை விரலில் தோய்த்து முகத்தில் பரவலாகத் தடவவும். ஒரு மெல்லிய துணியால் முகத்தைத் துடைத்து அழுக்கை நீக்கிவிடவும். மறுபடியும் கொஞ்சம் விளக்கெண்ணெயைக் கண்ணுக்குள் படாமல் முகத்தில் மேல் நோக்கி மெதுவாக மாலிஷ் செய்யவும். கண்ணைச் சுற்றிக் கருவளையமிருந்தால் கொஞ்சம் அதிகமாகவே உபயோகிக்கவும். படுக்கை மீது ஒரு பழைய துணியைப் போட்டுக்கொண்டு படுத்தால் கறை படாது. காலை சீக்கிரம் எழுந்துவிடுங்கள்.

மைதா மாவைக் கொஞ்சம் பாலுடனோ மோருடனோ எலுமிச்சம் பழச் சாறுடனோ கலந்து பேஸ்ட் மாதிரி செய்துகொண்டு கழுத்து, கன்னம், நெற்றி, முகவாய் கட்டை முதலிய இடங்களில் அப்பி விடவும். கண்களுக்குள் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சற்று நேரத்தில் காய்ந்து வாயைத் திறக்க முடியாமல் சுருக்கம் சுருக்கமாக அதிகோரமாகக் காட்சியளிக்கும். கண்ணாடியில் பார்த்துக்கொண்டால் மறுநாள் சிகிச்சையை விட்டுவிடுவீர்கள்.

வாயைச் சாப்பிடுவது போல் அசைக்கவும் கண்களை மேல் நோக்கி கீழ்நோக்கிப் பார்க்கவும் உருட்டி விழிக்கவும். பத்து நிமிடங்கள் கழித்துப் பச்சைத் தண்ணீரால் கழுவிவிடவும் கழுவுவது கஷ்டம். அடையாக மாவு ஒட்டிக்கொண்டிருக்கும். ஊறவைத்தே அலம்ப வேண்டும். அழுத்தித் தேய்க்கக் கூடாது. நன்றாக அலம்பிவிட்டுத் துணிய துடைத்துவிட்டு பாலாடையோ. கிளிஸரினே கொஞ்சம் போல் தடவிக் கொள்ளவும்.

குளிக்குமுன் ஒரு ஸ்பூன் கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவைகளை விழுதாக அரைத்துக் கொஞ்சம் பயத்த மாவுடன் கலந்துகொள்ளவும். உடம்பு முழுவதும் குளிக்கலாம். இப்படி ஒரு மாதங்கள் செய்து பாருங்கள்.

ன்னொரு விஷயம்: தினம் ஒரு வெங்காயத்தை நறுக்கித் தயிரில் கலந்து சாப்பிட முன் உட்கொள்ளவும். கந்தகச் சத்து சருமத்துக்கு நல்லது.

ருமம் வெளுக்க வேண்டுமானால் உப்பு, காரம் குறைக்கவும். எண்ணெய்ப் பொருளை விலக்கவும். மஞ்சள் பொடி கலந்த நீரைக் குடிக்கவும். எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். வேப்பிலை போட்டுக் காய்ச்சிய நீரில் குளிக்கவும். காலையில் எலுமிச்சம் பழத்தை நீரில் கலந்து உப்பு, சர்க்கரை போட்டு குடிக்கவும். கட்டாயம் பலன் கிடைக்கும்.

உதடு சிவக்க:

நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். பச்சையாக நிறையக் கறிகாய்கள் சாப்பிடவும். படுக்குமுன் கிளிஸரினால் உதடுகளுக்கு மாலீஷ் செய்யவும்.

பற்கள் வெளுக்க:

வாரத்துக்கொருமுறை எலுமிச்சம்பழச் சாற்றில் உப்பைக் கலந்து தேய்க்கவும். வெங்காயத்தைக் கடித்து அதன் சாறு கொஞ்ச நேரம் பல்லில் படும்படி வைத்திருந்து வாய் கொப்புளிக்கவும், சாக்லேட் இனிப்புப் பண்டங்களைச் சாப்பிட்டால் பற்கள் கறைபட்டுவிடும். பற்களை நல்ல பிரஷ்ஷினால் தினம் இரண்டு முறையாவது தேய்க்கவும்.

ண்கள் பளபளப்புடன் ஒளியுடன் இருக்க: பிடித்தால் இரவு ஒரு ஸ்பூன் காட் லீவர் ஆயில் சாப்பிடுங்கள். பிடிக்காவிட்டால் காலை வெறும் வயிற்றில் சுண்டைக் காயளவுகருவேப்பிலையை அரைத்துப் பச்சையாக விழுங்குங்கள். கண்கள் பாதுகாப்புக்கு நிறைய வெண்ணெய், கருவேப்பிலை, கொத்துமல்லி, கீரை, புதினா. பால் இவைகளைச் சேர்த்துக்கொள்ளவும். இலையைக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரை வடிக்கட்டி ஒரு துணியில் நனைத்து கண்ணைத் திறந்து கொண்டு அந்தத் துணியைக் கண்களின் மீது பத்து நிமிடங்கள் போட்டு வைக்கவும். அதே மாதிரி பன்னீராலும் செய்யலாம். கண்களை அகலத் திறந்து கொண்டு பச்சைத் தண்ணீரை வேகமாக அடித்துக் கொள்ளவும், காலைச் சூரியனை ஐந்து நிமிடங்கள் பார்க்கவும். சூரிய நமஸ்காரம் முடிந்தவர்கள் செய்யலாம்.

ண்கள் கெடாமலிருக்க இருட்டில் எழுதுவது, இரவில் கண்விழிப்பது. பகல் காட்சிகள் பார்ப்பது இவைகளைத் தவிர்க்க வேண்டும். குறித்த நேரத்தில் எழுந்து குறித்த நேரத்தில் சாப்பிட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com