பெண்களின் பழம் எது தெரியுமா...?

பெண்களின் பழம் எது தெரியுமா...?

லைகளில் விளையும் பிளம்ஸ் பழம் "கொத்துப்பேரி" என்றும் அழைக்கப்படுகிறது. சாப்பிட புளிப்பாக இருப்பதால் பலர் விரும்பும் பழமாக இது இல்லை. ஆனால் அதிக ஆற்றல் மிக்க பழம். இதிலுள்ள அதிகப்படியான வைட்டமின் சி தான் இதன் புளிப்பு சுவைக்கு காரணம்.

இனிப்பு, புளிப்பு மற்றும் லேசான கசப்பு சுவை கொண்ட இந்த பழத்தில் பல்வேறு வகையான பாலிபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் பிளம்ஸ் பழத்தை கோடையிலும் மற்றும் மழை காலத்திலும் உண்ண உகந்ததாக உள்ளது.

பிளம்ஸ் பழத்தில் புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணம் இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். புற்றுநோயால் இறக்கும் பெண்களில் 18 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயின் காரணமாக இறக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது. பிளம்ஸ் பழத்தில் பெண்களின் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் இருப்பதாக அமெரிக்காவின் "அக்ரிலைப்"ஆய்வு நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோய் சிகிச்சையில் உடலில் உள்ள புற்றுநோய் செல்களுடன் உடலில் உள்ள மற்ற செல்களும் அழிக்கப்பட்டு விடுவதால் நோயாளிகள் உடல் சோர்ந்து போகிறது. ஆனால் பிளம்ஸ் பழத்தில் உள்ள பிளோலிக் அமிலத்தின் கூட்டுப் பொருளான குளோரோ ஜெனிக் மற்றும் நியோகுளோரோஜெனிக் அமிலங்கள் உடலில் எந்த  விதமான பாதிப்பு இல்லாமல் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கும் என்கிறார்கள்

இந்த இராசயனங்கள் மற்ற சில பழங்களில் இருந்தாலும் பிளம்ஸ் பழத்தில் மிகுதியாக இருக்கிறது என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பிளம்ஸ் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நம் உடலில் உள்ள செல் திசுக்கள் வேகமாக அழிவதை தடுக்கும். இதனால் முதுமையை தள்ளிப்போட உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் இப்பழத்தில் உள்ள போலிக் அமிலம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆரோக்கியத்தை தருகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.

பிளம்ஸ் மாதவிடாய் நின்ற காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் எலும்பு இழப்பை தடுக்கும் திறனையும் கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட பல காரணங்களினால் ‘பிளம்ஸ்’ பெண்களின் பழம் என்று அழைக்கப்படுகிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com