லெமன் டீ விரும்பிக் குடிக்கும் நபர்கள் எச்சரிக்கை!

Lemon tea drinkers beware.
Lemon tea drinkers beware.

ம்முள் பலருக்கு டீ, காபி இல்லாமல் நாளே ஓடாது. குறிப்பாக டீ என்பது பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. இதில் ஒரு சிலருக்கு பால் இல்லாத கட்டன் சாயா பிடிக்கும், சிலருக்கு இஞ்சி ஏலக்காய் போட்ட மசாலா டீ பிடிக்கும், சிலருக்கு திக்கான பாலில் போட்ட டீ பிடிக்கும். இதையும் தாண்டி சிலர் லெமன் டீ விரும்பிக் குடிப்பார்கள். 

தேயிலையிலும் எலுமிச்சையிலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் இருக்கிறது. இதனாலேயே பலருக்கு லெமன் டீ அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. மேலும் லெமன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கையிலும் பலர் அருந்துகிறார்கள். ஆனால் இப்படி பருகுவது சில வல்லுனர்களின் கண்ணோட்டத்தில் மாறுபட்டதாக இருக்கிறது. தேனீரில் உள்ள சில டையூரிடிக் பண்புகளால் அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் பிற செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்கின்றனர். 

எலுமிச்சையிலும் இயற்கையாகவே அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், இதை தேநீருடன் சேர்த்து பருகி வந்தால் அமிலத்தன்மையின் அளவு மேலும் அதிகமாகும். இதனால் ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்ட இரு பொருள்களை ஒன்றாக சேர்ப்பது மூலம், உடலில் உள்ள பித்தம், கபம் ஆகியவை அதிகரிக்க வழி வகுக்கும். 

குறிப்பாக வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து செரிமான செயல்முறை பாதிக்கப்படலாம். மேலும் ஆசிட் ரிப்லெக்ஸ், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்றவை கூட ஏற்படலாம். உடலில் அமில அளவு அதிகரித்தால் அது வளர்ச்சிதை மாற்றத்தைத் தடுத்து அதிகப்படியான திரவ இழப்பிற்கு வழிவகுக்கிறது. எனவே அதிகமாக லெமன் டீ பருகுபவர்களுக்கு தலைவலி மற்றும் உடல் சோர்வு ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். 

இது மட்டுமின்றி எலுமிச்சையில் நிறைந்துள்ள அமிலத்தன்மை நம்முடைய பற்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும். இதனால் பற்களில் அரிப்பு துரிதப்படுத்தப்பட்டு சிதைவை ஏற்படுத்தலாம். அதேசமயம் அதிகமாக எலுமிச்சை டீ குடிப்பதனால் உடலில் உள்ள கால்சியம் சத்து வெளியேறுவதாகக் கூறுகின்றனர். இது நமது உடலின் நச்சு அளவை உயர்த்தி எலும்பு ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். 

எனவே நீங்கள் அதிகமாக லெமன் டீ குடித்து வரும் நபராக இருந்தால், சற்று அதன் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com