காலையில் கட்டாயம் ஃபாலோ பண்ணவேண்டிய பழக்கங்கள் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

காலையில் கட்டாயம் ஃபாலோ பண்ணவேண்டிய பழக்கங்கள் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

ன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிகவும் அவசியம். இருப்பினும் நமக்கான நேரத்தைக் கண்டுபிடிப்பது கடினமாகி வருகிறது. இதன் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கத் தொடங்குகிறது மற்றும் உடலில் பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. காலையில் சிறிது நேரம் ஒதுக்கி வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

1. ஆயில் புல்லிங்

பழங்காலத்தில் ஆயில் புல்லிங் செய்து உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்கி வந்தனர். ஆயுர்வேதத்திலும் இதைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்வதால் வாயில் உள்ள பாக்டீரியா மற்றும் துர்நாற்றம் நீங்கும், ஈறு வீக்கம் இருக்கது, உடலில் நச்சுத்தன்மை சேராது, உடலுக்கும் நல்ல ஆற்றல் கிடைக்கும்.

செய்முறை

ஒரு தேக்கரண்டி எள்ளு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை உங்கள் வாயில் போட்டு கொள்ளுங்கள்.5 முதல் 20 நிமிடங்களுக்கு வாயில் ஊற வைக்கவும்.பிறகு அதை துப்பவும்.எச்சரிக்கை ஆயில் புல்லிங் செய்யும் போது எண்ணெயை விழுங்குவதைத் தவிர்க்கவும் அதில் நிறைய பாக்டீரியாக்கள் இருப்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

2. இரண்டு கிளாஸ் தண்ணீர்

வெறும் வயிற்றில் 2 கிளாஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், உடலின் உறுப்புகளை நீரேற்றமாக வைத்து இருக்க உதவுகிறது மற்றும் சரியாகச் செயல்பட ஊக்குவிக்கிறது. நீர் உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துக்களை எடுத்துச் சென்று நச்சுகளை நீக்குகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்துகிறது மற்றும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இது முகத்திற்குப் பளபளப்பைக் கொண்டுவருகிறது மற்றும் முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.

3. ஊறவைத்த பருப்புகள்

பருப்புகளைத் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடும்போது தீங்கு விளைவிக்கும் என்சைம்கள் அகற்றப்பட்டு மற்றும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும். இவற்றில் கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவற்றை சாப்பிடுவதால் பல நோய்களில் இருந்து விலகி இருப்பது மட்டுமின்றி, சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com