புடலங்காயில் பொதிந்திருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள்!

புடலங்காயில் பொதிந்திருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள்!

புடலங்காயை ஒரு காயாய் மட்டும் கருதி பொரியல் கூட்டு என செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு அதில்  அடங்கியிருக்கும் ஏராளமான  மருத்துவ குணங்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவை என்னென்னவென்று இங்கே பார்ப்போம்.

* புடலங்காயில் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் நோய் தடுக்கப்படுகிறது.

* உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் செயலை சிறப்பாகச் செய்து உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.

* இதிலிருக்கும் வைட்டமின்-சி, ஃப்ளேவனாய்டுகள் மற்றும் கரோட்டிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை  வலுப்படுத்துகிறது. கால்சியம் எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்துகிறது.

* சர்க்கரை நோயாளிக்கு ரத்த சக்கரையின் அளவை சீராக்கி உடம்புக்கு தேவையான மற்ற அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அளிப்பதால் சர்க்கரை நோய்க்கு ஏற்ற காயாகிறது இது.

* இக்காயில் உள்ள நீர்ச்சத்து ரத்தத்திலுள்ள நச்சுக்கள், அதிகளவிலான உப்பு மற்றும் சிறுநீரகத்திலுள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது, ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

* புடலங்காய் குளிர்ச்சியான காய் வகையை சார்ந்ததால் ஆண்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, விந்துக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது.

* புடலை இலையின் சாற்றை இரண்டு டீஸ்பூன், தொடர்ந்து வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் சாப்பிட்டு வர இதயநோய் அனைத்தும் குணமாகும். மேலும் மன அழுத்தம் காரணமாக ஏற்படும் தூக்கமின்மை நோயும் குணமாகும்.

* புடலையின் வேரை மசிய அரைத்து அதில் துளி எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்க வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

* மூல நோய்க்கு புடலங்காய் சிறந்த மருந்தாகிறது.

* மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகிறது. கல்லீரலை பாதுகாக்கிறது.

இக்காயில் வைட்டமின் A, B, C மற்றும் கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மினரல்கள் போன்ற, உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளதால், வாரத்தில் இருமுறையாவது இதை உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com