வதந்தி - சஞ்சனா நேர்காணல்!

வதந்தி - சஞ்சனா நேர்காணல்!

இந்த ஆண்டு அறிமுகம் ஆன நடிகைகளில் தமிழ் நாட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஹீரோயின் என்றால் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ள வதந்தி வெப் தொடரில் நாயகியாக நடித்துள்ள சஞ்சனாதான். தனது அழகிலும், நடிப்பிலும் பலரை கவர்ந்த சஞ்சனா நமது கல்கி ஆன்லைன்க்காக அளித்த நேர்காணல்

எப்படி கிடைத்தது இந்த வாய்ப்பு?

சஞ்சனா :நடிப்பதில் முதலில் பெரிய ஆர்வம் இல்லை. யூ ட்யூபில் சில நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன்.வதந்தி சீரிஸ்க்காக ஆடிஷன் செய்கிறார்கள் என கேள்விப்பட்டு சென்றேன். கடவுள் ஆசீர்வாதத் தால் வாய்ப்பு கிடைத்ததாக நினைக்கிறேன்.

வேலோனி கேரக்டர்க்கு ஏதாவது ஹோம் ஒர்க் செய்தீர்களா?

சஞ்சனா : நான்தான் நடிப்பது என முடிவானவுடன் கூத்துப்பட்டறை கலைராணியிடம் நடிப்பு பயிற்சி மேற்கொண்டேன். எனக்கு ஓரளவு நடிக்க தெரியும் என்றாலும் கலை மேடம் கற்றுத்தந்த நடிப்பு நு ணுக் கங்கள் இன்று எனக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டை பெற்று தந்துள்ளது.

முதல் படத்தில் முதல் காட்சியில் பிணமாக நடித்தது வருத்தமாக இல்லையா?

சஞ்சனா :இதில் வருத்தப்பட எதுவும் இல்லை. ஹீரோயின் என்றால் முதல் காட்சியில் அழகாகத்தான் அறிமுகம் ஆக வேண்டும் என்ற நியதி ஏதாவது இருக்கிறதா? காட்சிக்கு தேவைப்படுவதால் பிணமாக நடித்தேன். அறிமுக காட்சியில் பிணமாக நடித்தால் அதிர்ஷ்டம் என்கிறார்கள் வெயிட். செய்து பார்ப்போம்.

வதந்தியில் மிக அழகாக ஆங்கிலம் பேசுகிறீர்களே படிப்பு தந்த அனுபவமா? பயிற்சி செய்தீர்களா?

சஞ்சனா :எனக்கு நன்றாக ஆங்கிலம் பேச தெரியும். இருந்தாலும் ஒரு அங்கிலோ இந்தியன் பெண் போல பேச கன்னியாகுமரியில் உள்ளஒரு அங்கிலோ -இந்திய பெண்மணி எனக்கு பயிற்சி தந்தார்.

இவ்வளவு பெயர் பெற்று தந்த வதந்தி தியேட்டரில் வெளியாகாமல் ott தளத்தில் வெளியானது கொஞ்சம் வருத்தம் தானே?

சஞ்சனா :இன்று ஒ டி டி தளங்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்து வருகிறார்கள். மொழி தாண்டி இந்த தளங்களில் வரும் படங்களை ரசிக்கிறார்கள். ஒரு தியேட்டரில் வரும் படம் வெற்றி பெற்றால் என்ன புகழ் கிடைக்குமோ அதற்கு இணையாகவோ, அல்லது அதிகமாகவோ எனக்கு இப்போது கிடைத்துள்ளதாக நினைக்கிறேன்.

வேலோனி போல சஞ்சனா வாழக்கையில் வதந்திகளை சந்தித்தது உண்டா?

சஞ்சனா :காலேஜில் நான் கேர்ள்ஸ் காலேஜில் தான் படிச்சேன்.ஸ்கூல் கோ எஜுகேஷன் தான். ஸ்கூல் படிக்கும் போது நான் ஒன்று செய்ய நினைக்க வேறு விதமாக சிறியளவில் வதந்தி பரப்பப்பட்டது.

சினிமா தாண்டி உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன?

சஞ்சனா : சினிமா தாண்டியும் எனக்கு சினிமா தான் பிடிக்கும். எனக்கு உதவி இயக்குனராக சேர்ந்து இயக்குனராக மாற வேண்டும் என்றுதான் ஆசை.எதிர்பாராத விதமாக நடிக்க வந்து விட்டேன். (நீங்க டைரக்ட் பண்ண போயிருந்தா உங்கள் அழகு தரிசனம் நம் மக்களுக்கு கிடைத்திருக்குமா!)

நீங்கள் தான் அடுத்த கனவு கன்னியா?

சஞ்சனா :உங்கள் வாழ்த்திற்கு மகிழ்ச்சி. (கொஞ்சம் வெட்கப்படுகிறார் )தமிழ் மக்கள் என்னை ஏற்றுகொண்டால் நான் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.

உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார்?

சஞ்சனா :பலரை பிடிக்கும்., சமீபத்தில் என்னை கவர்ந்த ஹீரோயின் ஐஸ்வர்ய லக்ஷ்மி.

ஜோடியாக நடிக்க விரும்பும் ஹீரோ?

சஞ்சனா : நிறைய பேர் இருக்காங்க. யார்னு சொல்றது.யார் கூட நடிச்சாலும் என் கேரக்டர்க்கு முக்கியத்துவம் தர்றதா இருக்கனும்.

லைலா, எஸ். ஜே சூர்யா, நாசர் இவர்களுடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன்.?

சஞ்சனா :லைலா மேடம் ஒரு பெரிய ஆர்ட்டிஸ்ட்ன்ற பந்தா இல்லாமல் ஒரு பிரண்ட் மாதிரி பழகுனாங்க.எஸ். ஜே சூர்யா சாருடன் சேர்ந்து நடிக்கிற காட்சி எதுவும் இல்லை. சூர்யா சார் வேலை செய்யும் போது பார்த்து சில விஷயங்களை கத்துகிட்டேன்.ஒருத்தர் நடிக்கும் போது அதை பார்த்து நாம செய்யும் ரீ ஆக்ஷன் நடிப்பில் மிக முக்கியமானது என நாசர் சார் எனக்கு புரிய வைத்தார்.

இந்தியாவில் பெண்கள் மீது வைக்கப்படும் வதந்தியை நிறுத்த என்னதான் வழி?

சஞ்சனா : பார்வையில் மாற்றம் வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com