மார்கழி மாதமல்லவா!

மார்கழி மாதமல்லவா!

இசை; இறை வழிபாடு; கோலம்; நல்ல பிராண வாயு போன்ற பல சூப்பரான செயல்களை ஊக்குவிக்கும் மாதம் மார்கழி!

‘மாதங்களில் நான் மார்கழியென’ கீதையில் கிருஷ்ணர் கூறியிருக்கிறார். தமிழகத்தின் தொல் சமயங்களான சைவமும், வைணவமும் மார்கழியில் கொண்டாடப் படுகின்றன. சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்களில் அதிகாலை வழிபாடுகள் அநேகம். தனுர் மாதமெனவும் இது கூறப்படுகிறது.

 இசை + இறை:

ண்டாள் நாச்சியாரின் திருப்பாவை; மாணிக்க வாசகரின் திருவெம்பாவை மற்றும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி ஆகிய பாடல்கள் மார்கழி மாதம் முழுவதும் கோயில்களின் தினசரி வழிபாட்டில் இடம் பெறும். திருப்பாவையும் திருவெம்பாவையும் வீடுகளிலும் ஒலிக்கும். பூஜைகளும், வழிபாடுகளும் இறைவனுக்குச் செய்யத்தக்க மங்களகரமான மாதம் மார்கழி.

 கோலம்:-

டும் குளிராக இருந்தபோதிலும், அவரவர் வீட்டு வாசல்களில் பெண்மணிகள் அழகாக, பெரிதாக கோலமிடுவது வழக்கம். அநேகர் மாக்கோலம் போடுவதுண்டு.

காரணம்...? குளிர் காலம் ஆதலால், எறும்பு, ஈ போன்ற சிறிய ஜீவராசிகளுக்கு வெளியே உணவு கிடைப்பது சிரமம். வீட்டிற்குள் புகுர முயற்சி செய்யும். அவைகளை வாசலிலேயே தடுத்து நிறுத்தி உணவளிக்க வேண்டி மாக்கோலம் போடும் பழக்கமிருந்தது.

இது சிறிது சிறிதாக மாறி, சில இடங்களில் பொடிக்கோலம், பூக்கோலமென ஆகி உள்ளது.

பூசணிப்பூ:

கோலத்தின் நடுவே கொஞ்சம் மாட்டுச்சாணம் வைத்து அதில் பூசணிப்பூ வைப்பது கிராமப்புறங்களில் இன்றும் தொடர்கிறது. கன்னிப்பெண்கள் வீட்டிலிருப்பதை உணர்த்தக்கூடியது பூசணிப்பூ. சில பெண்கள் தலையிலும் வைத்துக்கொள்வதுண்டு. பல திருமணங்களை நடத்தி வைத்த புண்ணியம் இப்பூசணிப் பூவுக்கு உண்டு.

பிராண வாயு:

திகாலையில் கிடைக்கும் தூய்மையான ஆக்ஸிஜன் மருத்துவ குணமுடையது. அதுவும் மார்கழி மாத அதிகாலை விசேடம்.

மாதம் முழுவதும், 10 – 15 பேர்கள் சேர்ந்துகொண்டு மார்கழி அதிகாலையில் பஜனைப் பாட்டுகளைப் பாடியவண்ணம் வீதிகளில் வலம் வருவது இன்றும் இருக்கிறது. வயதானவர்கள்கூட தலையில் மப்ளர், கனத்த கோட்டு அணிந்துகூடச் செல்கிறார்கள்.

பாவை நோன்பு

நேக பெண்கள் பாவை நோன்பு விரதமிருப்பது மார்கழியில்தான். கண்ணனுக்கு உகந்த மாதமாக மார்கழி இருந்ததால்தான், கண்ணனை மணக்க விரும்பிய ஆண்டாள்  நோன்பு நோற்று விரதமிருந்து பூஜை செய்ய மார்கழியைத் தேர்வு செய்தாள் எனக் கூறப்படுகிறது.

பிரம்ம முகூர்த்தம்      

தேவர்களின் ஒருநாள் பொழுது பூமியில் ஒரு வருடமெனப்படுகிறது. உத்தராயண காலமாகிய தை முதல் ஆனிவரை அவர்களுக்கு பகலாகவும், தட்சணாய காலமாகிய ஆடி முதல் மார்கழி வரை இரவாகவும் இருக்கும்.

தேவர்களின் இரவுப்பொழுது முடிந்து பகல் பொழுது விடியும் காலம் ‘பிரம்ம முகூர்த்தமாக’ அமைக்கப் பட்டுள்ளது மார்கழி மாதம்.

மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் மார்கழி அதிகாலை நேரம் பிரம்ம முகூர்த்தமாகும். இச்சமயத்தில் இறைவழிபாடு செய்வது மிகவும் விசேஷமாகும்.

வைகுண்ட ஏகாதசியும், ஆருத்ரா தரிசனமும் அதிகாலையில் கண்டு வணங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

“ஓம் நமோ நாராயணாய நம: ஓம்!

ஓம்” நமச்சிவாய நம: ஓம்!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com