நடிகர் சிவாஜிகணேசன் ~ தெரிந்ததும், தெரியாததும்!

ஜூலை 21 நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம்!
நடிகர் சிவாஜிகணேசன் ~ தெரிந்ததும், தெரியாததும்!

டிகர் சிவாஜி கணேசனின் உண்மையான பெயர் v.c.கணேசன். விழுப்புரம் சின்னையா கணேசன் 1928ல் அக்டோபர் 1ல் பிறந்தார். "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தை பார்த்து அறிஞர் அண்ணா வைத்த பெயர் தான் சிவாஜி கணேசன். அந்த நாடகத்தில் 95 பக்க வசனத்தை ஒரே நாளில் மனப்பாடம் செய்து சாதனை புரிந்தார்.

சிவாஜி கணேசன் நடிப்பதற்காக மேக்கப் போட்டு முதன் முதலாக காமிரா முன் நின்றது1950ம் ஆண்டு செப்டம்பர் 9 ம் தேதி. ஆனால் அவர் நடித்த முதல் படம் பராசக்தி வெளியானது 1952 ம் ஆண்டு. திரைக்கதை வசனம் ரிக்கார்டில் வெளியே வந்த முதல் படம் பராசக்தி அப் படத்தில் நடிக்க சூட்டிங்கிற்கு விமானத்தில் நடிக்க வந்த முதல் நடிகரும் சிவாஜியே.

தமிழ் திரைப்பட உலகில் முதன் முதலாக திரைப்படம் வருவதற்கு முன்"டிரெய்லர்' காட்டப்பட்ட படம் சிவாஜியின் "திரும்பிப்பார்'. உலகிலேயே ஒரு திரைப்படத்தில் 9 வேடங்களில் முதன் முதலில் நடித்தவர் சிவாஜி தான் படம்"நவராத்திரி'.

சிவாஜி பல படங்களில் பெண் வேடத்தில் நடத்திருந்தாலும் முதலில் நடித்தது "நூர்ஜகான்' என்ற படத்தில்தான்.

முதன் முதலாக கதாநாயகன் ஒருவருக்கு "கட்அவுட்'வைக்கப்பட்டது சிவாஜிக்குதான். படம் "வணங்காமுடி'85 அடி உயர கட்அவுட் வைக்கப்பட்டது. ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய படம் சிவாஜி நடித்த தெய்வ மகன் வருடம் 1969.

"நிரபராதி' என்ற படத்தில் நடித்த "முக்காமலா'என்ற நடிகருக்கு முதன் முறையாக டப்பிங் குரல் கொடுத்தவர் சிவாஜிதான்.

சிவாஜி நடித்து நல்ல வசூலை தந்த படம் " பலே பாண்டியா"இந்த படம் 15 நாளில் அதுவும் ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடத்தி வெளிவந்த படம்.

இந்திய சுதந்திரத்திற்கு பின் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் படம்~ சிவந்த மண். திரைக்கதை வசனம் ரிக்கார்டில் வெளி வந்து இலங்கையில் விற்பனை சாதனை படைத்த ஒரே தமிழ் படம் "கௌரவம்'.

 20செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் விளக்க உரையுடன் காட்ட வாங்கிய முதல் படம்"தில்லானா மோகனம்பாள்'. சிங்கப்பூர் நாடு சுதந்திரம் பெற்ற 150 ஆண்டு நிறைவு விழாவுக்கு அதிகாரபூர்வமாக காட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட படம்"தங்கச்சுரங்கம்'.

எம்.ஜி.ஆர் உடன் இணைந்து "கூண்டு கிளி' படத்தில் 1954 ம் ஆண்டு நடித்தார். ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்த முதல் படம் "கலாட்டா கல்யாணம்' 1960 ல். சிவாஜி ரசித்து பார்த்த எம்.ஜி.ஆர் படங்கள் "நாடேடி மன்னன், அடிமைப்பெண்'.

சிவாஜி கணேசன் 305 திரைப்படங்களில் நடித்துள்ளார் (19 படங்களில் கௌரவ வேடம் அதில் 2 ஹிந்தி படம், 2 மளையாளப்படம்,9 தெலுங்கு படம், 2 கன்னடப்படம்) 1952ல் பராசக்தியில் கதாநாயகனாக அறிமுகமாகி ,கடைசியில் 1999 ல் "பூ பறிக்க வருகிறோம்' படத்தில் நடித்தார். அரசு குறும்படங்களிலும் நடித்துள்ளார்.~ சத்ரபதி சிவாஜி, சிங்க நாதம் கேட்குது.தமிழில் 250 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்து அசத்தியிருக்கிறார் சிவாஜி.

சிவாஜி நடித்து தேசிய விருது பெற்ற படங்கள் 9 (அந்த நாள், எதிர்பாராத து, மங்கையர் திலகம், தங்க பதுமை, வீர பாண்டிய கட்ட பொம்மன், பாசமலர், திரு விளையாடல், தில்லானா மோகனாம்பாள், முதல் மரியாதை). மாநில விருது பெற்ற படங்கள் 5 (உயர்ந்த மனிதன், தில்லானா மோகனாம்பாள், தெய்வ மகன், வியட்நாம் வீடு ,தேவர் மகன்).

அமெரிக்க நயாகரா நகரில் ஒரு நாள் கௌரவ மேயராக பதவி வகித்து நமது நாட்டை பெருமைப்பட செய்தவர் சிவாஜி கணேசன்.1995ல் பிரான்ஸ் நாட்டின் "செவலியே விருது' பெற்று பெருமையடையச்செய்தவர்.

1953 முதல் 1993 வரை தன் 40 வருட திரை உலக காலத்தில் 30 கோடிக்கு மேல் தான தர்மங்களை செய்துள்ளார் சிவாஜி இது பலருக்கு தெரியாத விஷயம். இலங்கையில் ஒரு மருத்துவமனையைக் கட்டிக்கொடுத்துள்ளார்.

இந்திய பிரதமராக நேரு இருந்தபோது மதிய உணவு திட்டத்திற்காக ,ஒரு லட்சம் நன்கொடை வழங்கியவர் சிவாஜி, சீனப்போர் நிதிக்கு தனக்கு பரிசாக கிடைத்த தங்க மோதிரம், தங்கப்பேனா ஆகியவற்றுடன் 450 பவுன் நகைகளையும் போர் நிதிக்காக வழங்கி அசத்தியவர், வீர பாண்டிய கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் தனது செந்த செலவில் நினைவுச்சின்னம் எழுப்பியவர் சிவாஜி கணேசன். இவரின் கொடை தன்மையை புகழ்ந்து பாரதிதாசன் ஒரு பாடலே எழுதி உள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1986ல் டாக்டர் பட்டம்,1966 ல் பத்மஶ்ரீ பட்டம்,1984 ல் பத்ம பூசன் விருது பெற்றவர் சிவாஜி.

2001ஜூலை 21 ல் மறைந்த சிவாஜி கணேசன் அடிக்கடி கூறும் பொன்மொழி "நாளையைப்பற்றி நான் கவலைப்படவில்லை நாளைய கவலை இன்னொரு நாளைக்கு'.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com