கூச்ச சுபாவமுள்ள குழந்தைகளை மாற்றுவது எப்படி?

கூச்ச சுபாவமுள்ள குழந்தைகளை மாற்றுவது எப்படி?

னோதத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி 10-20 சதவீதம் குழந்தைகள் பிறக்கும்பொழுதே கூச்ச சுபாவம் கொண்டவையாக இருக்கின்றன. தாத்தா ஆசையாக விளையாட்டுக் காட்டினால் அழுதுகொண்டு ஓடும் குழந்தைகள், நர்சரிப் பள்ளியில் சேர வேண்டிய சமயத்தில் அம்மாவின் முந்தானையில் ஒளிந்துகொள்ளும் குழந்தைகளை எப்படிச் சமாளிப்பது?

1. மற்றவர்கள் முன் உங்கள் குழந்தைகளை 'என் பையனுக்குக் கூச்சம் ரொம்ப அதிகம். 'புதுமுகம் கண்டால் அட்டையாய் ஒட்டிக்குவான்' என்று- முத்திரை குத்தாதீர்கள். அல்லது மற்றவர்கள் 'ரொம்ப வெட்கப்படறான்' என்றும் சொல்லவிடாதீர்கள். புதியவர்கள் முன்பு குழந்தை தானாகத் தன் கூச்சத்தையும், பயத்தையும் அகற்றி சகஜமாக மாறுவதற்குச் சந்தர்ப்பம் கொடுங்கள்.

2. கூட்டங்களில் அல்லது உறவினர் திருமணங்களில் குழந்தையை வலுக்கட்டாயமாகப் பேசத் தள்ளி விடாதீர்கள். சில சமயங்களில் குழந்தை தன் கூச்ச சுபாவத்தை விட்டுப் பேச முன் வந்தால் பாராட்ட வேண்டும். கலகலப்பின்றி மெளனமாக இருந்தால் அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

3. இரண்டு குழந்தைகள் உள்ள வீட்டில் சிறிய குழந்தை நல்ல கம்பெனி கொடுத்தால் நல்ல பலன் இருக்கும்.

4. குழந்தைகள் பேசும்பொழுது ஆர்வத்துடன் கவனிக்கத் தெரிய வேண்டும். கலந்துரையாடும் பழக்கத்தை வீட்டிலே ஆரம்பிக்க வேண்டும். 'கேட்டதற்குப் பதில் சொல்' என்று கட்டளையிடும்பொழுது குழந்தை உரையாடும் சந்தர்ப்பங்கள் குறைந்து விடுகிறது.

5. கேலி செய்யும் பழக்கம் குழந்தைகளைப் பாதிக்கும். பெரியவர்கள் ஆன பின்னால் சிலர் கூச்சம், பயத்துடன் இருக்கக் காரணம் சிறு வயதில் தான் கேலிக்கு உள்ளான சம்பவங்கள்தான். இரண்டாவது குழந்தை மூத்த குழந்தையைக் கேலிக்கு உள்ளாக்கும் சந்தர்ப்பங்களைக் கண்டு மாற்றிக்கொள்கிறது. அதனால் கூச்ச சுபாவத்தைக் கண்டு கேலி செய்தால் இளம் நெஞ்சங்களில் அது அகலுவது கிடையாது.

6. எப்பொழுதும் குழந்தையின் நடை, உடை பாவனைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தால் அதுவே கூச்ச பயந்த சுபாவத்தைக் கொண்டு வரும்.

'நடக்கிறதைப் பாரு." "நீ இருக்கிற கறுப்புக்கு இப்படி வேறே ட்ரஸ் போட்டுக்கோ,'

''உனக்கு ஏன் நாக்கு குழறுது?"

 "ம். நல்லா திக்கித் திக்கிப் பேசு."

இதெல்லாம் மனத்தில் பதிந்தால் பேச, நடக்க, நல்ல ட்ரெஸ் போட்டுக் கொள்ளப் பயந்து நாலு பேர் முன்னால் கூச்ச சுபாவம் வராமல் என்ன செய்யும்?

7. தைரியமாகப் போனில் பதில் சொல்ல, யாராவது பெற்றோர்கள், வெளியே போயிருக்கும் விவரத்தைக் கேட்டால் சொல்ல, சின்னச் சின்ன மீட்டிங்கில் நாலு வார்த்தைகள் பேசத் தயார் செய்ய வேண்டும்.

8.  ஹோட்டலில் அல்லது கடைகள் உங்கள் குழந்தைகளை விவரம் கேட்கச் சொல்லுங்க ஹோட்டலுக்குப் போகும் பொழுது அருகில் இருந்து உங்கள் குழ்ந்தையைப் பேச வைக்கவும். குழந்தைகள் பணிவாகவும், பொறுமையாகவும் கேட்கும்பொழுது கூச்சு. பயந்த சுபாவம் போய் விடும்.

9. அடிக்கடி ஸ்கூலை மாற்றும்பொழுது புதிய பள்ளிக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ள முடியாமல் சில குழந்தைகளுக்குக் கூச்ச சுபாவம் வரலாம்.

பத்து வயதிலிருந்து 14 வயது வரை வரும் கூச்ச உணர்வு வேறு வகையானது;  தற்காலிகமானது. விடலைப் பருவத்தின் உணர்வு அது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com