கார் ஓட்டத் தெரிந்தால் போதுமா?

கார் ஓட்டத் தெரிந்தால் போதுமா?

காரில் அவ்வப்போது ஏதேனும் கோளாறுகள் ஏற்படலாம். அப்பொழுது உடனே எப்படிச்செயல்பட வேண்டும் என்பதைப் பற்றியும், சிறிது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

1. காரில் சிக்னல் விளக்கு எரியவில்லை. லூஸாக இருக்கலாம். இதை சரி செய்யும்வரை கையால் சரியானபடி சைகை செய்து உங்கள் நோக்கத்தைத் தெரியப்படுத்தவும்.

2. காரை நிறுத்தும்பொழுது,  பிரேக் பிடிக்கையில் எரியும் சிவப்பு விளக்கு எரிவதில்லை – Stop light switch கெட்டுப் போயிருக்கும். ஒன்று மட்டும் எரியவில்லையானால் அந்த பல்ப் மட்டும் எரிந்து போயிருக்கும்.

3. பிரேக் பிடிக்கும்பொழுது லைனிங்  கிரீச்சென்று சப்தம் கேட்கிறது- பிரேக் தேய்ந்து போயிருக்கும். அல்லது  அழுக்கும் எண்ணெயுமாக அடைத்துக் கொண்டிருக்கும்- கார் மெக்கானிக்கிடம் காண்பித்துச் சரி பார்க்கவும்.

4. பிரேக்கை மிதிக்கும்பொழுது அடிவரை அழந்துகிறது. மறுபடி மறுபடி மிதித்தால்தான் (Pumb) கார் நிற்கிறது – பிரேக் சரியானபடி பொருத்தப்படவில்லை, அல்லது பிரேக் எண்ணெய் தேவைப்பட்டால் உடனே மெக்கானிக்கிடம் காட்டவும்.

5. பிரேக் பிடிக்கும்பொழுது கார் ஒரு பக்கமாக இழுக்கிறது – பிரேக்கில் அழுக்கு சேர்ந்து கிரீஸ் – ஆக ஆகியிருக்கிறது. சுத்தப்படுத்தவும்.

6. ஞ்ஜின் அதிகப்படியாக சூடாகிறது.

7. Windshield wiper கண்ணாடியிலிருந்து தண்ணீரை சரியானபடி துடைப்பதில்லை.வைப்பரில் உள்ள ரப்பர் பிளேடு தேய்ந்து போயிருக்கும். கண்ணாடியில் எண்ணெய்க் கறை இருக்கலாம். கண்ணாடியை சோப் போட்டுச் சுத்தப்படுத்தவும். அவசியமானால் வைப்பர் பிளேடை மாற்றவும்.

8. மேடு பள்ளமான சாலையில் ரொம்ப தூக்கிப் போடுகிறது. அல்லது காரை நிறுத்தும்பொழுது முன்னால் தூக்கிப் போட்டு குலுங்கி நிற்கிறது. ஷாக் அப்சார்பர் தேய்ந்து போயிருக்கும். பரிசோதித்து மாற்றவும்.

9. ஸ்டீயரிங் வீல் பக்கவாட்டில் ஆடுகிறது – முன்பக்கத்துச் சக்கரங்களின் நிலை சரிசமமாக இல்லை. அல்லது ஸ்டியரிங் இயந்திரத்தில் பிடிப்பு தளர்ந்துவிட்டது. உடனே மெக்கானிக்கிடம் காட்டவும்.

10. முன்பக்கச் சக்கரங்கள் ஒரு பக்கமாகத் தேய்கிறது – சக்கரப் பொருத்தம் சரியில்லை. சரி பார்க்கவும்.

11. ஞ்ஜின் தாளகதியில் சப்தமிடுகிறது – எஞ்ஜினில் எண்ணெய் போதாது. பரிசோதிக்கவும்.

12. காரை ஸ்டார்ட் செய்யும்பொழுது, எஞ்ஜின் புரண்டு கொடுக்கிறது. ஆனால் கார் ஸ்டார்ட் ஆவதில்லை.

இக்னீஜன் ஸிஸ்டத்தில் கோளாறு, டிஸ்டிரிபியூட்டர், ஸ்பார்க் ப்ளக், இக்னீஷன் ஸிஸ்டம், ஒயர் எல்லாவற்றையும் சோதிக்கவும்.

13. காரை ஸ்டார் செய்யும்பொழுது ஒரவிதமான விளைவும் இல்லை –பேட்டரியில் சக்தியில்லை. அதற்கு சக்தியூட்ட வேண்டும். அல்லது அதை மாற்ற வேண்டும்.

நெடுந்தூரப் பயணம் செய்கையில் அவசியமாகச் சில உபகரணங்களை வைத்திருக்க வேண்டும். கார் நடுவழியில் எங்காவது நின்றுவிட்டால் இவை உடனே கைகொடுக்கும். (tools set box)

1. ஸ்பேர் டவர், 2. ஃபேன் பெல்ட் , 3. ஸ்பார்க் ப்ளக்ஸ் 4. எலக்டிரிகல் வொயர், 5. ஸ்குரூ டிரைவர், 6. ஜாக், 7. ஸ்பானர், 8. ரேடியேடர் ஹோல், 9. ஒரு டின் எண்ணெய், 10. தண்ணீர், 11. கை துடைத்துக் கொள்ள ஒரு துணி, 12. முன்புறக் கண்ணாடியைத் துடைக்கும் ஒரு துணி.

நீங்களே கார் ஓட்டாவிட்டாலும்கூட வீட்டில் கார் இருந்தால், இவை எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டால், தக்க சமயத்தில் பிரகாசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com