மும்பை Audi கார் சாய் வாலா!

மும்பை பரபர!
மும்பை Audi கார் சாய் வாலா!

பொதுவாக விலையுயர்ந்த காரில் ஒருவர் வந்தால் அநேகர் அதையே உற்று நோக்குவார்கள். அதுவும் Audi கார் வைத்திருப்பவர்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்துதான்.

அப்படிப்பட்ட Audi காரில் இளைஞர் ஒருவர் நண்பருடன் சேர்ந்து மும்பை மாநகரில் டீ வியாபாரம் செய்கிறார்.

கார் டிக்கியிலிருந்து டேபிள் ஒன்றை எடுத்து அதை வெளியில் வைத்து அதன் மீது அடுப்பு, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான பார்கோடு போன்றவைகளை மடமடவென்று இளைஞர் அரேன்ஞ்ச் செய்கிறார். Sedan வகையைச் சேர்ந்த Audi A 6 கார் இது.

மன்னு சர்மா மற்றும் அமித் கஷ்யப் இருவரும் இணைந்து Audi காரை டீ ஸ்டாலாக ஆக்கியுள்ளனர்.

மும்பை மாநகரின் மெயின் ஏரியாக்களில் இவர்களது டீக்கு நல்ல வரவேற்புள்ளது. அதுவும் மாலை – இரவு நேரங்களில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறுகிறது.

ஹரியானவைச் சேர்ந்த மன்னு சர்மா சிறிது காலம் ஆப்பிரிக்காவில் வேலை பார்த்தவர். அமித் கஷ்யப் பஞ்சாபைச் சேர்ந்தவர். ஸ்டாக் மார்க்கெட்டில் டிரேடிங் செய்து வருகிறார். Pharmacistம் கூட.

பிரஷாக இஞ்சி, ஏலக்காய் இடித்து டீயில் சேர்த்து சுடச்சுட, கமகமவென மணம் வீச ரூ 20/- ஒரு கப் என விற்கிறார்கள். ஒரு நாளைக்கு 600 டீக்கள் விற்பனையாகிறது. அப்படியென்றால் 30 நாட்கள்X600Xரூ 20 மாதம் ரூ 3,60,000/- இது பார்ட் டைம் சம்பாத்தியம்.

Audi A 6 காரின் விலை ரூ 70 லட்சம். 20 மாதங்களில் பணம் ரெகவராகிவிடும் என்கிற நம்பிக்கையுடன் செயல் படுகின்றனர்.

இளைஞர்களாகிய மன்னு சர்மாவும், அமித் கஷ்யப்பும் கூறுவது என்னவென்றால் “செய்யும் தொழிலே தெய்வம். நம் கைவசமிருக்கும் தொழிலைச் சிறப்பாக செய்தால், இந்தியாவிலேயே அதிகம் சம்பாதிக்கலாம். வெளிநாடு எல்லாம் போகத் தேவையில்லை. திரைத்துறையினர் பலரும் எங்களது டீயை அருந்த வருகின்றனர். அவ்வப்போது சின்னத்திரையில் ஆடிஷன் நடிக்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது.

அந்தேரி, லோகண்ட்வாலா பகுதியில் அநேக டப்பிங் ஸ்டூடியோக்கள் இருப்பதால், இந்த இடத்தில் நல்ல வரவேற்பு + வியாபாரம். வேலை கிடைக்கவில்லையென்று சோர்ந்து போய் விடுவது கூடாது.

தண்ணீர் கலக்காமல், பாலிலேயே டீ போடுவதால், அதனுடைய டேஸ்ட்டே தனியாக விளங்குகிறது.

ஒரு இடத்தில் இருந்து வியாபாரம் செய்வதைவிட, கார் மூலமாக செய்கையில், வெவ்வேறு இடங்களில் டீ விற்பனை செய்ய இயலுகிறது. அதோடு அநேக விதமான மக்களை சந்தித்து பல விஷயங்களை அறிய முடிகிறது” என்பதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com