நெய், சுலபமாகக் கிடைக்கும் ஒரு நல்ல இயற்கை மருந்தாகும். இந்த மருந்தை நாம் உணவோடு சேர்த்து தானே சாப்பிடுகிறோம். சிலர் சாதாரணமாகவே நெய்யை குடிப்பார்கள். அதிலும் குறிப்பாக, நெய்யை வெறும் வயிற்றில் பருகினால் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறதாம்.
நெய்யில் வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. காலம் காலமாக நாம் சமைலுக்குப் பயன்படுத்தும் நெய் நம்மை உள்ளிருந்து அழகாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பல பிரபலங்களும் தங்கள் சருமத்தைப் பாதுகாக்க தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, நெய்யில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. நெய்யின் கொழுப்பில் உள்ள கரையக்கூடிய வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் A, D, K, E மற்றும் உடலுக்கு நலம் பயக்கும் பண்புகள், உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்கின்றன. மேலும், இதில் நிறைந்துள்ள உணவுக் கொழுப்பு உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கான சிறந்த மூலப்பொருளாக அமைகிறது.
நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதோடு, மூளையின் நரம்புகளைத் தூண்டி, ஞாபக சக்தியை அதிகப்படுத்தும். பெரும்பாலானோர் நெய் உடல் எடையைப் பெருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் தவறான கூற்று. நெய் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும். நெய்யை சாப்பிடுவதால் உடலில் புரதம் சுரந்து உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.
நெய் சாப்பிடுவதால் முடி ஊட்டம் அடைந்து, நீளமாக வளர உதவுகிறது. அதோடு, முடி நல்ல வளர்ச்சியுடனும், மிருதுவாகவும் காணப்படும். முடி கொட்டுதலைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும். தவிர, இளநரையும் நீங்கும். புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் நெய்யில் அதிகளவில் உள்ளன. எனவே, வெறும் வயிற்றில் நெய் பருகினால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.