கிராம்பு டீ
கிராம்பு டீ

ஆரோக்கியத்துக்கு உகந்த கிராம்பு டீ!

ணவுக்கு மணமும், சுவையும் தரக்கூடிய மசாலாப் பொருட்கள் இன்றி இந்திய சமையல் அமையாது. சமையலில் நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு மசாலா பொருளும் உணவுக்கு நல்ல மணம் கொடுக்கும். அத்துடன் மருத்துவ ரீதியான பலன்களையும் தரும். அந்த வகையில் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்து நிறைந்த லவங்கம் என்னும் கிராம்பை நாம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கிராம்பை உணவில் சேர்க்க இயலாதவர்கள் இதனை டீயாகத் தயாரித்து அருந்தினால் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் அளவுகள் குறையும். இந்த டீயை அருந்தும்போது உங்கள் உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் நிறையும்.

கிராம்பு டீ தயாரிப்பது எப்படி?
கிராம்பு டீ தயாரிப்பது எப்படி?

கிராம்பு டீ தயாரிப்பது எப்படி?

இரண்டு கப் தண்ணீரில் 2 அல்லது 3 கிராம்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அது ஒரு கப் அளவுக்கு வற்றி வந்தவுடன் இறக்கி ஆற வைத்து, அதில் தேன் கலந்து சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒருமுறைக்கு மேல் இந்த டீ அருந்த வேண்டாம்.

கிராம்பு டீ அருந்துவதால் 11 வகையான பலன்களை நீங்கள் பெறலாம். அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

1. லவங்கத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் இருக்கின்றன. இவை நம் உடலில் உள்ள நச்சுக்களை எதிர்த்துப் போராடும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

2. ஆண்டிசெப்டிக், ஆண்டிவைரல் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான பண்புகள் இதில் உள்ளன. இதனால் தொற்றுகள், சளி, இருமல் போன்றவற்றை விரட்டியடிக்கலாம்.

3. உங்கள் செரிமானத் திறனை மேம்படுத்துவதற்கு கிராம்பு டீ உதவியாக அமையும். உணவு ஆரோக்கியமாக செரிமானம் ஆகும் பட்சத்தில் உங்கள் உடல் எடையை எளிமையாகக் குறைக்கலாம்.

4. உடலின் மெடபாலிச விகிதத்தை கிராம்பு டீ மேம்படுத்தக் கூடியது. இதுவும் உடல் எடை குறைப்புக்கு உதவும்.

5. பற்கள் அல்லது ஈறுகளில் வலி உண்டானால் கிராம்பு அதற்கு நிவாரணமாக அமையும். இதில் அழற்சிக்கு எதிரான பண்புகள் உள்ளதால் ஈறுகளில் உள்ள வீக்கத்தைக் குறைத்து பல் வலியில் இருந்து நிவாரணம் தரும்.

6.சைனஸ் பிரச்னையால் அவதிபடுபவர்களுக்கு இது ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது.

7. விட்டமின் இ மற்றும் விட்டமின் கே போன்ற சத்துக்கள் இதில் இருப்பதால் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக இதைப் பயன்படுத்தலாம். அத்துடன் இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கக் கூடியது.

8. நம் உடலிலும், சருமத்திலும் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த விஷயங்களை கிராம்பு வெளியேற்றிவிடும்.

9. புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் லவங்கத்தில் உள்ளன. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி கிராம்பு டீ அருந்தலாம்.

10. கிராம்பு டீயை ஆற வைத்து குளிர்ச்சியாக அருந்தினால் நாள்பட்ட முழங்கால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

11. கிராம்பு டீ அருந்தினால் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் அளவுகள் குறையும். இந்த டீயை அருந்தும்போது உங்கள் உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் நிறையும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com