
2017 ம் ஆண்டு முதல் ஜூன் 6ம் தேதி உலக பூச்சிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் பூச்சிகளால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
பூச்சிகள் பற்றிய சில சுவாரஸ்யமான செய்திகள்;
1. உலகில் 900 மில்லியன் பூச்சிகள் இருக்கின்றன.
2. ஒரு தேனீயின் இறக்கைகள் பறக்கும் பொழுது ஒரு நொடிக்கு 190 முறை சிறகடிக்கும். அதாவது நிமிடத்திற்கு 11,400 முறை.
3. சிலந்தி தன் வாழ்நாளில் குறைந்தது 2000 பூச்சிகளையாவது சாப்பிடுகின்றன. மொத்தம் 30,000 வகையான சிலந்திகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவற்றில் விஷம் இல்லை. ஆனால் ஆஸ்திரேலியாவில் வாழும் சில சிலந்திகள் கடித்தால் மனிதர்களுக்கு மரணம் உறுதி.
4. ஒரு லேடி பேட் (ladybird) எனப்படும் கரும்புள்ளிகள் கொண்ட செந்நிற வட்டச் சிறு வண்டு தன் வாழ்நாளில் 5,000க்கும் மேற்பட்ட பூச்சிகளை உண்ணும்.
5. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினங்கள் ஃப்ரூட் பிளைஸ் (Fruit flies) எனப்படும் பழ ஈக்கள்.
6. உலகம் முழுவதும் 17,500 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவை சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி திரிகின்றன. பட்டாம்பூச்சிகள் கால்களால் தான் சுவையை அறிகின்றன. ஆனால் அவை மனிதர்களுடைய நாக்கை விட 200 மடங்கு சக்தி கொண்டவை .
7. இந்த உலகில் போர்களில் மனிதர்கள் இறந்ததை விட கொசுக்கள் கடித்து, அவை ஏற்படுத்திய நோய்களால் இறந்த மனிதர்கள் அதிகம்.
8. கரப்பான்பூச்சியால் ஒரு மணிநேரத்தில் மூன்று மைல்கள் வரை பறக்க முடியும். தலை இல்லாமல் ஒரு வாரம் வரை கரப்பான்பூச்சியால் உயிர் வாழ முடியும்.
9. எறும்புகள் எப்போதும் தூங்குவதில்லை. அவை 30 வருடங்கள் வரை உயிர் வாழும். புல்டாக் எறும்புகள் (Bulldog ants) அதன் உடலின் நீளத்தை விட ஏழு மடங்கு தூரத்திற்கு குதிக்கும்
10. ஒரு சாண வண்டு (dung beetle) அதன் எடையை விட 1,141 மடங்கு அதிக எடையை இழுக்கும். அது 6 டபுள் டெக்கர் பேருந்துகளை ஒரு மனிதன் இழுக்கும் அளவுக்கு சமம்.
11. ஒரு தேனீக் கூட்டமானது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 கிலோ தேனை உற்பத்தி செய்யும்.
12. சிவப்பு தபால்காரர் பட்டாம்பூச்சி (red postman butterfly) நச்சு தாவரங்களை சாப்பிட்டு அதன் உடலில் விஷத்தை உருவாக்குகிறது.