சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு!

உலக கருணை தினம் -  நவம்பர் 13
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு!

வ்வொருவரும் சக மனிதனை சமமாகவும் கருணையோடும் அணுகுவதற்கும், இரக்கம், பச்சாதாபம் மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கும், கருணைச் செயல்களை ஊக்குவிப்பதற்கும்  நவம்பர் 13 அன்று உலகம் முழுவதும் உலக கருணை தினம் கொண்டாடப்படுகிறது. கருணையால் உலகமும் அதன் மக்களும் எப்படி மாறுகிறார்கள், அவர்களது வாழ்க்கையில் அந்த மாற்றம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்த இந்த நாள் பெரிதும் உதவியாக இருக்கிறது.

தொழுநோயாளிகள் என்றும் பாராமல் அனைவரையும் அரவணைத்து கருணையின் உருவமாக விளங்கியவர்  அன்னை தெரசா. ’கருணை என்பது காது கேளாதவர்கள் கேட்கக்கூடிய மற்றும் பார்வையற்றவர்கள் பார்க்கக்கூடிய ஒரு மொழி’  என்கிறார் ஆங்கில எழுத்தாளர் மார்க் ட்வைன்.

நம் அன்றாட வாழ்வில் நம்மால் செய்யக்கூடிய அன்பான செயல்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

புன்னகை: இது மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் எளிதில் பிறருக்குத் தொற்றக்கூடியது. நண்பர்கள், குடும்பத்தினர், சக ஊழியர்கள் மற்றும் அந்நியர்களிடம் கூட அன்பாகப் புன்னகைக்கத் தயங்காதீர்கள்.

விட்டுக்கொடுத்தல்: பேருந்து, ரயிலில் செல்லும்போது  முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு இருக்கையை விட்டுத் தரலாம். வங்கிகள், தபால் நிலையம், பால்பூத், மளிகைக்கடை போன்ற இடங்களில் வயதானவர்களுக்கு முன்னுரிமை தந்து அவர்களை முதலில் போகச் சொல்லலாம். அவர்களால் நீண்ட நேரம் நிற்க முடியாது அல்லவா?

உதவுதல்: யாராவது பணப்பிரச்னையால் சிரமப்பட்டால், முடிந்தால் பணம் தந்து உதவலாம். பணஉதவி செய்ய முடியாவிட்டால், உடல் உழைப்பின் மூலம் உதவலாம். அதுவும் முடியாவிட்டால், பிறர் பிரச்னையை அக்கறையுடன் செவிமடுப்பது, முடிந்தால் தகுந்த ஆலோசனை வழங்குவதும் கருணையான செயலே.

இதையும் படியுங்கள்:
பண்டிகை, விசேஷங்களின்போது பெரியவர்கள் ஆசிர்வாதம் அவசியம்: ஏன் தெரியுமா?
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு!

மனதார பாராட்டுங்கள்: குடும்பத்தினர், நண்பர்கள், சகபணியாளர்கள், நம் வீட்டில் வேலை செய்பவர்கள் என்று பாரபட்சமின்றி அனைவரையும் பாராட்டுங்கள்.

நேரம் ஒதுக்குதல்: நம்மை நேசிப்பவர்கள், நண்பர்கள் மற்றும் நம் உதவி தேவைப்படுபவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையும், பேசுவதற்கும் உதவி செய்வதற்கும் தயாராக இருக்கிறீர்கள் என்பதையும் உணர்த்துங்கள்.

பணிவும் நன்றியுணர்வும்: எப்போதும் சக ஊழியர்கள், குடும்பத்தினர், வீட்டுப் பணியாளர்கள் போன்றவர்களிடம் ‘தயவுசெய்து’ மற்றும் ‘நன்றி’ என்று சொல்லுங்கள். உங்களை தாழ்மையுடன் வைத்திருக்கவும், உங்கள் மேல் அன்பும், மரியாதையும் நீடித்திருக்கவும் இது உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com