காய்களை பச்சையாக சாப்பிடுவதால் என்ன பலன்?

காய்களை பச்சையாக சாப்பிடுவதால் என்ன பலன்?

காய்கறிகளை பச்சையாக சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா? அவை உடலுக்கு நல்லதா? கெட்டதா? இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம்தான். சில காய்களை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக, சில காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதை விடவும், அப்படியே சாப்பிடுவதால் முழு சத்துக்களையும் பெற்று ஆரோக்கியமாக வாழ துணை புரிகிறது.

முள்ளங்கியை சமைத்து சாப்பிடுவதை விடவும் பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சக்கரையின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

பூண்டுகளை பச்சையாக மென்று சாப்பிடும்போது, அதில் உள்ள அல்லிசின் என்னும் கலவை டி.என்.ஏவைப் பாதுகாக்கும். அதேபோல், முட்டைக்கோஸ் மற்றும் பசலைக் கீரையில் வைட்டமின் கே, சி மற்றும் இரும்பு சச்து நிறைந்துள்ளது. உடல் எடை குறைவதற்கும், உடல் வலிமை பெறுவதற்கும் இது உதவுகிறது. வேக வைத்து சாப்பிடுவதை விட, இதுபோன்ற காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கச் செய்வதில் பீட்ரூட் முக்கிய பங்காற்றுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய முக்கியமான காய்களில் இதுவும் ஒன்றாகும். அதைப்போலவே, தினமும் தேங்காய் துண்டை ஒன்றை பச்சையாக மென்று சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து குறைத்து, மூளை மற்றும் இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

ViktorHanacek.cz

கேரட்டில் வைட்டமின் ஏ நிறைத்துள்ளதால் அது கண் நல்ல பார்வைக்கு மட்டுமில்லாமல், உடலுக்குத் தேவையான ஆற்றலையும் அளிக்கிறது. தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்னைகளில் இருந்து உடனடி தீர்வுகளைத் தருகிறது. புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய சக்தி தக்காளிக்கு உள்ளது. உடலின் கொழுப்பை கூட தக்காளி குறைத்துவிடும்.

தினமும் முளைகட்டிய பயிரை சாப்பிடுவதால் உடல் வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. பகல் மற்றும் இரவு உணவுகளுடன், வேக வைக்காத முளைகட்டிய தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம். ஆரோக்கிய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறைகள் அவசியம் என்பதை உணர்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com