வெற்றிக்கு காரணமாக இருக்கும் நான்கு விஷயங்கள்!

RICH PEOPLE
RICH PEOPLE

ரு நடுத்தர குடும்பத்தில் இருந்து கொண்டு பணக்காரராக மாற விரும்பினால், பணக்காரர்களின் வெற்றி சார்ந்த சில ரகசியங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். 

"எனக்கு நேரமில்லை எனச் சொல்வது, எனக்கு அது வேண்டாம் என்பதற்கு சமம்"

உலகில் பெரும்பாலானவர்கள் ஒரு நாளைக்கு அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி பெரிதாக பேசுகிறார்களே தவிர, ஒரு வருடத்தில் அவர்களால் என்ன சாதிக்க முடியும் என்பதைப் பற்றி பேசுவதில்லை. ஒரு நாள் அவர்களால் சரியாக செயல்பட முடியவில்லை என்றாலும், வாழ்க்கையே வீணாகிவிட்டது போல் உணர்கிறார்கள். ஆனால் பணக்காரர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அவர்களின் குறிக்கோள் சரியானதாக இருக்கும். அவர்களது செயல்களில் தெளிவு மிகுந்து காணப்படும். 

  1. அவர்களது குறிக்கோள் நிமிடத்தின் மீது இருக்கும்.

ஒரு ஐந்து நிமிடத்தில் இந்த உலகத்தில் என்ன நடந்திருக்கும் தெரியுமா? என உங்களைக் கேட்டால், ஐந்து நிமிடத்தில் ஒன்றுமே செய்ய முடியாது எனக் கூறுவீர்கள். ஆனால் ஐந்து நிமிடத்தில் உசேன் போல்ட் அவரது ஓட்டத்தை முடித்திருப்பார். எலான் மஸ்க் அவரது பணியாளர்கள் அனைவருக்கும் ஈமெயில் அனுப்பி இருப்பார். இப்போது சொல்லுங்கள் 5 நிமிடத்தில் இந்த உலகத்தில் என்னென்ன நடந்திருக்கும்?. சாதனையாளர்களின் குறிக்கோள் எப்பொழுதுமே முக்கியமான விஷயங்கள் மீது இருக்குமே தவிர, ஏதோ சில விஷயங்களில் உள்ள முக்கியமானவற்றின் மீது இருக்காது. 

  1. செய்ய முடிந்ததை செய்வார்கள். 

ஆம், பணக்காரர்கள் தங்களால் செய்ய முடிந்ததை முதலில் செய்து விடுவார்கள். சராசரி மனிதர்களைப் போல, எந்த விஷயத்தையும் முயற்சிக்காமல் மனதிலேயே நினைத்துக்கொண்டு, இது நமக்கு ஒத்து வராது என ஒதுங்கிவிட மாட்டார்கள். இவர்களுக்கு தங்களிடம் இருப்பதை வைத்து முயற்சிக்கலாம் என்ற மனோபாவம் இருக்கும். இதனாலேயே அவர்களின் வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. 

  1. சக்கரத்தை மீண்டும் செய்ய வேண்டாம் என்பது பற்றி அவர்களுக்குத் தெரியும்.

அதாவது பணக்காரர்களுக்கு ஒரு விஷயத்தை தொடக்கத்தில் இருந்து செய்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் தங்களை புத்திசாலிகளுக்கு மத்தியில் வைத்துக் கொள்வார்கள். அவர்களைப் பயன்படுத்தி தனக்குத் தெரியாத விஷயங்களையும் எளிதாகத் தெரிந்து கொள்வார்கள். உதாரணத்திற்கு ஒரு தொழிலை எவ்வித முன் அனுபவம் இன்றி தொடக்கத்திலிருந்து செய்து கற்றுக் கொள்வதற்கு பதிலாக, அந்த தொழிலை ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் ஒரு நபருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது, அவர்களிடம் அந்தத் தொழில் சார்ந்த சாதக பாதகங்களை முன்கூட்டியே கேட்டு தெரிந்துகொள்ள முடியும். இதனால் அவர்களின் பெரும்பாலான பணமும் நேரமும் மிச்சப்படுகிறது. 

  1. பணக்காரர்கள் இல்லை என சொல்லத் தயங்குவதில்லை.

திடீரென உங்களுடைய நண்பர் உங்கள் வீட்டுக்கு வந்து "வா பத்து நாட்கள் சுற்றுலா சென்று விட்டு வரலாம்" எனக் கேட்டால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்? பெரும்பாலானவர்கள் உடனடியாக குதூகலம் அடைந்து தங்களின் முக்கிய வேலைகள் பற்றி சிந்திக்காமல் சரி போகலாம் எனச் சொல்வார்கள். ஆனால் பணக்காரர்கள் தனக்குப் பிடிக்காத முக்கியத்துவம் இல்லாத விஷயங்களுக்கு தைரியமாக இல்லை என சொல்லும் மனோபாவம் கொண்டவர்கள். இதனால் அவர்களால் முக்கிய வேலைகளில் கவனம் செலுத்தி பணத்தை மேலும் சம்பாதிக்க முடிகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com