வாழ்க்கையில் அவசியம் தவிர்க்க வேண்டிய 8 விஷயங்கள்!

வாழ்க்கையில் அவசியம் தவிர்க்க வேண்டிய 8 விஷயங்கள்!

வாழ்வில் வெற்றியடைய விரும்பும் ஒரு மனிதர் கட்டாயம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.

1. பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்தல் (மல்டிடாஸ்கிங்):

இந்த உலகில் இரண்டு சதவீத மனிதர்கள் மட்டுமே மல்டிடாஸ்கிங்கில் வெற்றிகரமாக ஈடுபடுகின்றனர் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஒரே நேரத்தில் பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்யாமல், ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும் கவனம் வைத்து செய்தால் மட்டுமே அதை சிறப்பாக செய்ய முடியும்.

2. ஒப்பீடு செய்தல்:

பிற வெற்றியாளர்களைப் பார்த்து எந்த விஷயத்திலும் காப்பி அடிக்கவேண்டாம். உங்களுக்கு என்று இருக்கும் தனிச்சிறப்பைக் கண்டுபிடித்து அந்த பாணியிலேயே செயல் ஆற்றுங்கள்.

3. குறை சொல்தல்:

பிறரை அடிக்கடி குறை சொல்லும் போது, நம் மனதில் உள்ள நேர்மறை எண்ணங்களை துடைத்தெடுத்து விட்டு, எதிர்மறை சிந்தனைகள் வந்து சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளும். இது உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும்.

4. சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுதல்:

சமூக வலைதளங்களில் நிறைய நேரத்தை செலவிடும் போது கவனம் சிதறும். உங்களைச்சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டால் மட்டும் போதுமானது. தேவையில்லாத ஆப்’களை உங்கள் மொபைலில் இருந்து நீக்கிவிடவும்.

  5. எல்லாவற்றிற்கும் சரி சொல்லுவது:

பிறர் சொல்லும் எல்லா ஆலோசனைகளையும் அமைதியாக கேட்டுக்கொள்ளுங்கள். முடிவெடுப்பது நீங்களாக இருக்கட்டும். பிறரின் ஐடியாக்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்வது தோல்வியில் தான் முடியும்.  

6. பயப்படுதல்:

உங்கள் வெற்றியை நோக்கிய பயணத்தில் எந்த ஒரு புது செயலையும் செய்ய அஞ்சாதீர்கள். இதை செய்தால் தோற்றுவிடுவோமோ என்று பயம் கொண்டு செய்யாமல் விட்டு விடாதீர்கள். துணிந்தவனுக்குத் தான் வெற்றி கிடைக்கும்.

7. அதீத தன்னம்பிக்கை:

உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கை நல்லது தான் என்றாலும், அதீத நம்பிக்கையுடன் சில விஷயங்களை ஆராயாமல் செய்வது சிக்கலில் முடிந்து விடும்.

8. தோல்வியில் துவளுதல்:

லட்சியப்பாதையில் பயணிக்கும்போது எடுத்து வைக்கும் எல்லா அடிகளும் சரியாய் இருக்கும் என்று சொல்ல முடியாது. அங்கங்கே சறுக்கினாலும், தோல்விகளைக் கண்டு துவலாமல் அதை அனுபவமாக எடுத்துக்கொண்டு முன்னேறுவது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com