வாழ்க்கை என்றாலும், விளையாட்டு என்றாலும், வெற்றி பெற இந்த 10 விதிகள் தான்!

வாழ்க்கை என்றாலும், விளையாட்டு என்றாலும், வெற்றி பெற இந்த 10 விதிகள் தான்!

பிரான்ஸ் நாட்டின்  நாட்டர்டாம் பல்கலைக்கழகத்தின்  புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளராக இருந்தவர் லூஹோல்டேஜ். இவர் வாழ்விலும், விளையாட்டிலும் வெற்றி பெற 10 கொள்கைகளை சொல்கிறார். அவைகள்...

1) ங்களுக்குகே தெளிவாக தெரியும் எது  சரி, எது தவறு? என்று எனவே உலக நியதிகளின்படி, சட்ட திட்டங்களின் படியே எப்போதும் நடந்து கொள்ளுங்கள். சுய விருப்பு, வெறுப்பின் படியே அநேக பேர் நடந்து கொள்வார்கள். அது வேண்டாம்.

2) பிறக்கும் போதே யாரும் திறமையுடன் பிறப்பதில்லை. எதிலும் வெற்றி பெற, உங்களால் செய்ய முடிவதை, சிறப்பாக செய்யுங்கள் அது போதும்.

3) ங்களை அடுத்தவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதைப்போலவே நீங்கள் அடுத்தவர்களை நடத்த வேண்டும். அன்புடன் ஒருவரையொருவர் தட்டிக் கொடுத்து, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பழகி வரும் எந்தவொரு நிறுவனமும் சரி, குடும்பமும் சரி, விளையாட்டு குழுவும் சரி தோல்வியை சந்திப்பதில்லை.

4)  வ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் அவசியம் வேண்டும், சும்மா வந்து வாழ்ந்து விட்டு போவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

5) வாழ்க்கையில் நீங்கள் மட்டும் தனியாக இருந்து சாதித்து விட முடியாது. கால்பந்து விளையாட்டு வாட்டர் பாய் முதல் கோச் வரை அவரவர் தன் கடமையை சரிவர செய்தால் தான். ஒரு டீம் வெற்றி பெற முடியும். எனவே, வாழ்வில் உங்கள் பங்களிப்பை திறம்பட்ட செய்யுங்கள்.

6) டிப்படை சரியாக இருந்தால் தான் எதுவுமே சரியாக அமையும். ஒரு கட்டிடத்தில் அடித்தளத்தில் ஒரு சிறு குறை ஏற்பட்டால் அது மொத்த கட்டிடத்தையே நிலை குலையச்செய்து விடும் அல்லவா! எனவே அடிப்படை விஷயத்தில் ஒரு சிறு குறை கூட வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7) ங்களை  நீங்களே முழுமையாக நம்ப வேண்டும்.  இது மிக முக்கியம், விளையாட்டில் உங்கள் மீது நம்பிக்கை உங்களுக்கு இல்லாமல், நீங்கள் ஒரு பெரிய விளையாட்டு வீரராகவோ, கோச்சாகவோ இருந்து என்ன பிரயோஜனம்?

8) ரு நிறுவனமாகட்டும், விளையாட்டாகட்டும் 'டீம் ஒர்க்' இருந்தால் தான் அது வெற்றி கானும். இது அடிப்படை தத்துவம். உன்னை நம்பலாமா? உன்னால் வெற்றி பெற முடியுமா? என்று கேட்பார் ஒரு கோச் அல்லது ஒரு முதலாளி. பதிலுக்கு விளையாட்டு வீரர் அல்லது தொழிலாளியோ கேட்பார், என்னை கைவிட மாட்டீர்கள் அல்லவா என்று. ஒருவரை ஒருவர் நம்பி கடமையை செய்தால் தான். வெற்றி இல்லையேல் தோல்வி தான்.

9) து வந்தாலும், அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.

10) வெற்றி பெற போகிறோம் என்ற முழு நம்பிக்கையில் எதிலும் ஈடுபட வேண்டும், தோல்வி நினைவு கூடவே கூடாது.

         இந்த 10 கொள்கைகளை கடைபிடித்தாலே நீங்கள் வாழ்விலும் சரி, விளையாட்டிலும் சரி சாதிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com