தொழிலதிபர் கெமன்ஸ் வில்லியம்ஸின் வெற்றிக்கான இருபது வழிகள்!

SUCCESS
SUCCESSwww.businesstoday.com.my

வாழ்க்கையில் சாதித்துக் காட்ட வேண்டும் எனும் ஆர்வம் ஒவ்வொருவருக்கும் உண்டு ஆனாலும் திறமையிருந்தும் எப்படி எல்லாம் செயல்களை முறைப் படுத்தினால் வெற்றி கிட்டும் என்பது அறியாமல் தடுமாறி நிற்பார்கள் .

அவர்களுக்காகவே வெற்றிக்கு இருபது கட்டளைகளை வெற்றியாளரான ஹாலிடே இன் நிறுவனர் கெமன்ஸ் வில்லியம்ஸ் (Kemmons Wilson) வகுத்துள்ளார்.  இவற்றைக் கடைப்பிடித்து வெற்றியை ருசிப்போமா  ?

  1. தினமும் அரைநாள் (12 மணி நேரம் ) கடுமையாய் உழையுங்கள்.

  2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு ஒன்றுதான்.

  3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்.

  4. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது

  5. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்.

  6. எதையும் நாளை என்று தள்ளிப் போடக்கூடாது.

  7. வேலை (தொழில்) அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது.

  8. கைக்கடிகாரத்தை விட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்.

  9. முடியாது  நடக்காது  போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.

  10. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும்.

  11. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரு வழிகள் உண்டு. ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது .

  12. கவலைப் படாதீர்கள் , கவலையில் எந்த நன்மையையும் கிடைக்காது .

  13. பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட ,செய்யும் காரியத்தை நமக்குப் பிடித்ததாக ஆக்கிக் கொள்ளவேண்டும் .

  14. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.

  15. மற்றவர்களை உங்களுக்காக உழைக்க வைப்பதில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது.

  16. சந்தோசத்தைக் கொடுப்பது பணம் மட்டுமல்ல .

  17. மற்றவர்கள் நம்மை வழி நடத்த வேண்டும் என்று நினைக்க கூடாது.

  18. வெற்றிக்குத் தேவை பாதி அதிர்ஷ்டம் ,பாதி அறிவு

  19. கடவுளை நம்புங்கள்.

  20. பிறரை பாதிக்காத அன்பு மட்டுமே வெற்றியை தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com