விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்த்தால் போதாது. வாழ்க்கையாகவே பார்க்க வேண்டும்.
விளையாட்டு என்பது பூப்பந்து, டேபிள் டென்னிஸ் போன்றவை மட்டுமல்ல.
வாழ்க்கையே ஒரு விளையாட்டுத்தான். அதை முழுமையாக விளையாட வேண்டும்.
வாழ்வை ஆனந்தம் தரும் விளையாட்டாகக் கருதினால் அது இன்பம். போட்டியாகக் கருதினால் அது சூதாட்டம்.
இன்பமும், துன்பமும் வரலாம். அதனால்தான் குழந்தைகள் விளையாட்டை விரும்புகின்றன.
தெரிந்த மனிதன் அதை ஒரு போட்டியாக புரிந்து கொள்கின்றான். அவதிப்படுகின்றான். விளையாட்டு ஓர் ஆரோக்கியத்திற்காக தோன்றியது.
அது ஆனந்தம் அளிக்கக் கூடியது. அதுவே போட்டியானால் பொறாமை, பகையுணர்வு மேலோங்கி துன்பத்தினை அளிக்கக் கூடியது.
வாழ்வை விளையாட்டாகக் கருதினால் இன்பத்தையும், போட்டியாகக் கருதினால் துன்பத்தையும் தரக் கூடியதாகி விடும்.
அந்த நாடு அப்போது தான் விடுதலைப் பெற்றருந்தது. அதன் அதிபராக பொறுப்பு ஏற்றவர் நாட்டில் கல்விச் சாலைகளை ஏற்படுத்தி, கல்வியுடன் விளையாட்டுக் களையும் பயிற்றுவிக்க திட்டம் போட்டார்.
அதன்படி ஒரு பயிற்சியாளர் அந்த கிராமத்து இளைஞர்களை இரு குழுக்களாகப் பிரித்து அந்த விளையாட்டின் சட்ட திட்டங்களைச் சொன்னார்.
எந்த அணி என்னென்ன தவறுகள் செய்தது, எத்தனைப் புள்ளிகள் என்று கணக்கிட்டு. முடிவில் குறைவாகப் புள்ளிகள் எடுத்த அணி தோற்ற அணி என்று அறிவிக்கப்படும் என்று கூறினார்..
எனவே நாளை நடைபெறும் போட்டியில் நன்றாக விளையாடி போட்டி போட்டு புள்ளிகள் எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது அந்த இளைஞர்கள் நாங்கள் அனைவரும் அங்கும் இங்குமாக நட்புடன் ஆனந்தமாக விளையாடவே விரும்புகின்றோம். எங்களுக்கு எந்தப் போட்டியும் வேண்டாம்.
நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக விளையாடுவது மட்டும் போதும் என்றனர்
ஆனந்தம் தரும் வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொண்டு நட்புடன் மகிழ்வுடன் விரும்புங்கள்.
பொறாமைகளைத் தவிர்க்க, போட்டிகளைத் தவிர்த்து விடுங்கள்.
வாழ்க்கை எனும் விளையாட்டில் முழுமையாக ஈடுபடுங்கள்!