ஈர்ப்பு விதியைப் பயன்படுத்தி வெற்றியாளராக மாற உதவும் ஏழு விஷயங்கள்!

ஈர்ப்பு விதியைப் பயன்படுத்தி வெற்றியாளராக மாற உதவும் ஏழு விஷயங்கள்!

னைவராலும் தாம் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழமுடியும். ஒருவருக்கு என்ன வேண்டுமோ அதை அடைய கடின உழைப்பு, முயற்சியுடன் சேர்த்து ஈர்ப்பு விதியையும்  உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும். எப்போதும் நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். நினைத்ததை எல்லாம் அடைய முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

1. அதிர்ஷ்டத்தை நம்புவதை நிறுத்துங்கள்

‘அதிர்ஷ்டம் இருந்தால் எனக்கு வெற்றி கிடைக்கும்’ என்று நம்புவதை முதலில் நிறுத்தங்கள். ஏனென்றால் உங்களுடைய வெற்றிக்காக நீங்கள்  வெளிப்புறத்தில் இருந்து ஒரு ஆதரவை தேடுகிறீர்கள். அது உங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை. உங்களுடைய சொந்த திறமையில் நம்பிக்கை வைத்து முயற்சி செய்தால் உங்களுடைய அதிர்ஷ்டத்தை நீங்களே உருவாக்க முடியும்.

2. என்ன வேண்டுமோ அதில் முழு கவனத்தையும் வையுங்கள்

ங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இல்லாவிட்டால் ஈர்ப்பு விதி பயனளிக்காது. உங்களைப் பற்றிய தெளிவான சுயமதிப்பும் சுய அலசலும் கண்டிப்பாக தேவை. உங்கள் லட்சியத்தில் முழு கவனத்தையும் வையுங்கள்.

3. புத்திசாலித்தனமாக  திட்டங்களை தீட்டி  செயல்படுத்துங்கள் உதாரணமாக மாரத்தானில் ஓட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுடைய உடல் அதற்கு தகுதி பெற்றிருக்க வேண்டும். ஒரு புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று விரும்பினால் தினமும் கொஞ்ச நேரமாவது நீங்கள் எழுத வேண்டும்.  வெற்றி என்பது திட்டம், செயல்படுத்துதல், அர்ப்பணிப்பு எல்லாம் சேர்ந்ததுதான். நேர்மறை எண்ணங்களும் திட்டங்களும் சேர்ந்தால் உங்களுடைய லட்சியம் விரைவில் முற்றுப்பெற்று விடும்.

4. காட்சிப்படுத்துதல்

ந்த உத்தி  மிக நன்றாக வேலை செய்யும். உங்களுடைய கற்பனையையை உபயோகப்படுத்தி உங்களுடைய ஆசை அல்லது லட்சியம் நிறைவேறி விட்டது போல மனக்கண்ணில் காட்சியாக பாருங்கள். அது வெறுமனே காட்சியாக இல்லாமல் அதில் உணர்ச்சிபெருக்கும் கலந்து இருக்க வேண்டும். ஒரு புத்தகத்தை எழுத விரும்புகிறீர்கள் என்றால், அந்தப் புத்தகம் பத்தாயிரம் பிரதிகள் விற்பனை ஆகிவிட்டது என்று செய்தி உங்களுக்கு கிடைத்து, மிக மிக சந்தோஷத்தில் உங்கள் மனம் துள்ளிக்குதிப்பது போல  உணர்வுபூர்வமாக கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

5. நேர்மறையான உறுதிமொழிச் சொற்களை தினமும் சொல்வது;

 ‘நான் என்னை முழுதாக நம்புகிறேன். எனக்கு எல்லாவிதமான திறமைகளும் உள்ளன.  என்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெற்று நான் அபரிமிதமான சந்தோஷத்தை அடையப் போகிறேன்’’ என்று தினமும் சிறிது நேரம் சொல்லவேண்டும்.

6. நன்றி உணர்வு

ன்றி உணர்வு நிறைய மாயாஜாலங்களை உங்கள் வாழ்வில் நடத்தும். வெற்றிக்கான உங்கள் முயற்சியில், உங்களுக்கு உதவிய நபர்களுக்கும், இயற்கைக்கும்,  கடவுளுக்கும் நன்றி சொல்வீர்களானால் மிக விரைவில்  உங்களுக்கு வெற்றி கிடைத்துவிடும்

7. தியானம் செய்யுங்கள்

வ்வப்போது ஈர்ப்பு விதி மிக சுலபமாக எதிர்மறை எண்ணங்களால் தடுக்கப்படும். நேர்மறை எண்ணம் மனதில் எழுதுவதற்கு தியானம் மிக மிக அவசியம். மனதில் இருந்து பழைய கசப்பான நினைவுகளையும் எதிர்காலத்தைப் பற்றிய  பயத்தையும் நீக்கி விட்டு நிகழ்காலத்தில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை தியான நிலையில் மட்டுமே கேட்க முடியும்.

இந்த ஏழு விதிகளையும் பயன்படுத்தி, ஈர்ப்பு விதியின் துணையுடன் மிக்க விரைவில் நீங்கள் வெற்றியாளராக வலம் வரமுடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com