அவ்வளவு சுலபமாக கிடைக்காது ‘வெற்றி’ !

அவ்வளவு சுலபமாக கிடைக்காது ‘வெற்றி’ !

வெற்றியாளர்களை நாம் தொலைவில் இருந்து பார்ப்பதற்கும்  அருகில் இருந்து பார்ப்பதற்கும்  உண்மையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

வெற்றியாளர்கள் அனைவரும் எந்நேரமும் முழு உற்சாகத்துடனே எதிர்நீச்சல் அடித்து வெற்றியை போகிற போக்கில் தட்டிச் செல்வார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அவர்களுக்குள்ளும் மனப்போராட்டங்கள் நடைபெறுகின்றன.

எல்லா வெற்றியாளர்களுக்கும் முயற்சியை கைவிடுவதற்கான உந்துதல் இருந்து கொண்டே இருக்கும். கனவைக் கைவிடச் சொல்லி உள்ளிருந்து வரும் எச்சரிக்கை குரல்கள் அவை.

உன்னிடத்தில் பணம் இல்லை. உனக்கு குடும்ப பின்னணி கிடையாது. உன் கனவு இலக்கை பலரும் கண்டு தோல்வியைச் சந்தித்திருக்கின்றனர். இவ்வாறெல்லாம் உள்ளிருந்து ஒரு குரல், நம்மைப் போலவே அவர்களுக்கும் எப்போதும் கேட்டுக் கொண்டு இருக்கும்

பெரும் சருக்களையும், வீழ்ச்சியையும் சந்திக்கும்போது எல்லாம் கனவுகளை கைவிடச் சொல்லும். அக்குரல் இன்னும் உரக்க ஒலிக்கும்.

நீ நினைத்ததை அடைய, நீ திட்டமிட்டதை விட இரு மடங்கு நேரமாகலாம். அதற்கு நிறைய பயிற்சிகளும் உழைப்பும் தேவைப்படும்.

நீண்ட கால கடின போராட்டங்கள் உன்னை வருத்தலாம். ஆகவே முயற்சியைக் கைவிட்டு விடு என ஒரு குரல் ஒலிக்கும்.

ஆனால்!, வெற்றியாளர்கள் அந்த குரல்களுக்கு செவி மடுப்பதில்லை.

நீங்கள் அக்குரலுக்குச் செவி சாய்த்துவிட்டால், நீங்கள் எதை நோக்கி ஓடுகின்றீர்களோ அதை இடையிலேயே விட்டுவிட்டால், நீங்கள் தோல்வியுற்ற பலகோடி பேர்களில் நீங்களும் ஒருவர் ஆவீர்.

ஆனால்!, வெற்றியாளர்கள் எங்கே வேறுபடுகிறார்கள் தெரியுமா...? 

கடினமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சியை காணும் மனநிலை கொண்டவர்கள் எப்போதும் வெற்றியையும் அதன் மூலம் புகழையும் பெறுகிறார்கள். எவ்வளவு வலிமையற்று, சோர்வுற்று இருந்தாலும், தவறுகள் செய்திருந்தாலும், திரும்பி நின்று போராடலாம் என்னும் எண்ணம் அவர்களுக்கு ஓங்கும். அதுவே அவர்கள் இன்று இருக்கும் நிலைக்குக் காரணம்.

தோல்விகளும், துன்பங்களும், இடையூறுகளும் வந்தாலும், கொண்ட மறைபொருளில் இருந்து விலகாதிருத்தலும் கூட ஒரு வெற்றிதான்...!

அந்த மெல்லிய இழையை நீங்கள் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். அது உங்களை வெற்றியை நோக்கி இழுத்துச் செல்லும்.

இதுவே!, வெற்றியாளர்களின் வெற்றிக்கான மறைபொருள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com