உங்கள் வாழ்க்கையை மாற்றும் பல்லி விளைவு!

The lizard effect that will change your life.
The lizard effect that will change your life.

ன்று காலையில்தான், ஐன்ஸ்டீனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஒரு விளைவு ஒன்றைக் கண்டுபிடித்தேன்.

அதுதான் பல்லி விளைவு...

இந்த உலகத்தில் இருக்கும் மிகப்பெரிய முரண்பாட்டுக் கொள்கை என்னவென்றால், நம்மைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை தவறாக பார்க்கும் மனோபாவம்தான். 

  • தன்னவிட திறமையில, சொத்து சுகத்தில் மேம்பட்டு இருப்பவர்களை தவறாகவே பேசும் இந்த சமூகம். அதாவது, பைக் மேல தப்பு இருந்தாலும், ஏதாவது ஆக்சிடென்ட் ஆச்சுன்னா, லாரி காரனதான் புடிச்சு அடிப்போம். 

அது என்னடா பல்லி விளைவு? எங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்ணு எனக் கேட்கிறீர்களா? 

அது ஒன்னும் இல்ல. ரொம்ப பெருசால்லாம் எதிர்பார்க்க வேண்டாம்.

இப்போ உங்க ஹால்ல உக்காந்து டிவி பாத்துட்டு இருக்கீங்கன்னு வச்சிப்போம். திடீர்னு உங்க பெட்ரூம்ல ஏதோ எடுக்க போறீங்க. லைட் போட்ட உடனேயே, உங்கள சுத்தி பக்கத்துல இருக்குற பல்லிகள் எல்லாம் தெரிச்சி ஓடும்.

அப்படியே அர்ஜெண்டா  பாத்ரூம் பக்கம் போன அங்க சுத்தி இருக்குற பல்லிங்க எல்லாம் உங்கள பாத்து அலறி ஓடும்.

அதே மாதிரி உங்க வீட்ல நீங்க எங்க போனாலும் உங்களுக்கு பக்கத்துல இருக்குற பல்லிகள், ரன்னிங் ரேஸ் ஓடிக்கிட்டு இருக்கும்.

உங்களைப் பொறுத்த வரைக்கும் நீங்க உங்க வேலையை பார்க்கப் போறீஙக.

ஆனா அது அந்த பல்லிகளுக்குத் தெரியாம, நீங்க அதை என்னவோ பண்ணிட போறீங்கன்னு பயந்து ஓடுது.

இதேதான் நம்ம சமூகத்துலயும் நடக்குது.

சிறுசா இருக்குறது பெருசா இருக்குறத பார்த்து, பயப்படுது, பொறாமைப்படுது, தப்பா பேசுது ஏதாவது பிரச்சனைனாலே இவன் தான் காரணமா இருப்பான்னு நினைக்கத் தோணுது.

ஆனா உண்மையிலேயே பெருசா இருக்கிறவன் அவன் வேலைய தான் அவன் பாத்துட்டு இருக்கான். சிறுசா இருக்கிற நாமதான் தேவையில்லாம அவன் மேல கான்சென்ட்ரேட் பண்ணி, ஏன் எதுக்குனே தெரியாம அலறி அடிச்சு ஓடிட்டு இருக்கோம்.

இதுதான் நான் கண்டுபிடிச்ச பல்லி விளைவு. 

எனவே நம்மை விட உயர்ந்தவர்களைக் கண்டு பொறாமைப்படுவதையோ அல்லது கோபப்படுவதையோ விட்டுவிட்டு, நாம் நம்முடைய செயல்களின் மீது கவனத்துடன் இருப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com