மோட்டிவேஷனைக் குறைக்கும் இரண்டு காரணிகள்!

Two factors that reduce motivation.
Two factors that reduce motivation.

ங்களால் ஏன் எப்போதும் தொடர்ந்து உந்துதலுடன் இருக்க முடியவில்லை தெரியுமா? ஏனென்றால் மோட்டிவேஷனுக்காக நீங்கள் பிறரை நம்பி உள்ளீர்களே தவிர, அதன் உண்மையான அர்த்தம், அது உண்மையில் எங்கிருந்து கிடைக்கிறது என உங்களுக்குத் தெரிவதில்லை. பெரும்பாலான சமயங்களில் மோட்டிவேஷனுக்காக நீங்கள் வெளிப்புறங்களில் இருந்து கிடைக்கும் விஷயங்களையே நம்பி இருப்பதால், அதை உங்களால் நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. 

உற்சாகமூட்டும் இசையை கேட்பது, மோட்டிவேஷன் வீடியோ பார்ப்பது, மோட்டிவேஷன் புத்தகம் அல்லது கட்டுரை படிப்பது போன்றவை நமக்கு வெளிப்புறத்தில் இருந்து உந்துதலை ஏற்படுத்தக் கூடியவை. ஆனால் நீங்கள் கூறலாம், "இதனால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். Netflix -ல் மோட்டிவேஷன் ஆவண படங்களைப் பார்ப்பது எனக்கு சிறப்பான உணர்வை ஏற்படுத்துகிறது" என. 

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இப்படி வெளிப்புறத்தில் இருந்து கிடைக்கும் மோட்டிவேஷன் கொஞ்ச காலத்துக்கு மட்டுமே உங்களிடம் இருக்கும். சில மணி நேரங்கள் கழித்து அத்தகைய மோட்டிவேஷன் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதற்குக் காரணம், நீங்கள் செய்யும் செயல்களில் ஒரு நிலையான "நான் ஏன் இதை செய்ய வேண்டும்?" என்ற காரணி இல்லை. இதனை Why Factor என்று கூறுவார்கள். அதாவது நாம் செய்யும் எந்த செயலுக்கும் காரணம் என்று ஒன்று இருக்க வேண்டும். அத்தகைய காரணம் உறுதியாக இருந்தால் மட்டுமே எந்த செயலாக இருந்தாலும் அதில் மகிழ்வுடன், நீண்ட காலத்திற்கும் நம்மால் கொண்டு செல்ல முடியும். 

என்னிடம் ஒரு சரியான Why Factor உள்ளது. ஆனால் எனக்கான உந்துதல் ஏன் கிடைக்கவில்லை? என சிலர் கூறுவார்கள். அவர்கள் அப்படி உணர்வதற்கு ஆற்றல் இன்மை மற்றும் கவனச்சிதறல் என்ற இரு காரணிகளைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 

ஆற்றல் இன்மை: அதாவது நாம் ஒரு செயலை செய்வதற்கான போதிய ஆற்றல் இன்றி அதைத் தள்ளிப் போடுவதாகும். 

கவனச்சிதறல்: ஒரு செயலை செய்யும்போது திடீரென உங்கள் கவனத்தை சிதறடிக்கும் செயல்களில் ஈடுபடுவது மூலமாகவோ அல்லது போன், கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் போன்றவற்றாலோ நாம் செய்யும் செயலை முடிப்பதன் காலம் தாமதப்படுத்தப்படும். 

இந்த இரண்டு மிக முக்கிய காரணிகள் ஒருவரின் மோட்டிவேஷனை முற்றிலும் இல்லாமல் போகச் செய்கிறது. எனவே நீங்கள் செய்யும் செயல்களுக்கான ஒரு ஆழமான Why Factor ஏற்படுத்திக் கொண்டு வெற்றி பெறும் வரை முயல வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com