வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா? அப்போ இதை அவசியம் விட்டு விடுங்கள்!

வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா? அப்போ இதை அவசியம் விட்டு விடுங்கள்!
Published on

து ஒரு விழா. சாப்பாடு முதல் தண்ணீர் வரை அனைத்திலும் அத்தனை ஒழுங்கு இருந்தது. யாரும் எதற்கும் அலையாதவண்ணம் அத்தனை திட்டமிடலுடன் இருந்தது. யார் இதற்கு பொறுப்பாளர் என்று கேட்டேன். அதோ அவர்தான் என ஒருவர் காட்டப்பட அவரிடம் சென்று சிறப்பாக பணிசெய்துள்ளீர்கள் பாராட்டுகள் என்றேன். அவரோ “ இந்தப் பாராட்டு என்னிடம் வேலை பார்க்கும் அந்த இளைஞனுக்கே சேர வேண்டும்” என்றார். சற்றுத்தள்ளி நின்ற அந்த இளைஞனைப் பார்த்தேன். அந்த இளைஞன் பாராட்டுப் பெற்றதற்காக நெஞ்சை நிமிர்த்த வேண்டும் அல்லவா? ஆனால் அவனோ கைகளைக் கட்டிக்கொண்டு“ எல்லாம் ஐயா போட்ட பிச்சை” என்றான்.

    காரணம் இதுதான். அப்பா இறந்ததும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த அந்த இளைஞனுக்கு விழா அமைப்பாளரான இந்த நபர் வேலை வாய்ப்பை அளித்துள்ளார். அந்த நன்றி உணர்வுடன் தான் பின்னிருந்து வேலை செய்யத்தான் பொருத்தமானவன் எனும் மனப்பான்மையும் சேர அவன் இன்னும் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கிறான். என்பது அவனைப் பார்த்ததும் தோன்றியது. பத்து வருடங்களாக இவரிடம் வேலை பார்க்கும் அந்த இளைஞனின் திறமை அவனுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையினால் அவனை முதலாளியாக உயர்த்தாமல் இன்னும் தொழிலாளியாகவே வைத்துள்ளது.

    இந்த இளைஞன் போலத்தான் பல திறமைகள் இருந்தும் அதை முழுமையாக பயன்படுத்தி வெற்றி பெறாமல் ஏதோவொரு காரணத்தினால் தாழ்வுமனப்பான்மையுடன் முன்னேறாமல் இருக்கின்றனர் பலர். இதில் பெண்களும் அடக்கம் . இது சரியா ? வெற்றிகளை முடக்கும் விசயங்களில் முதன்மையானது  தாழ்வுமனப்பான்மை. அதை விட்டு விட என்ன செய்ய வேண்டும்?      

   முதலில் தோற்றத்தை மேம்படுத்துங்கள்..ஆம் எந்த ஒரு காரியத்தையும் துடிப்புடனும் ஆர்வத்துடனும் செய்யக்கூடியவர் என்ற எண்ணத்தை உங்கள் தோற்றமே வெளிப்படுத்த வேண்டும். வெற்றியாளர்களைநன்கு கவனித்துப் பாருங்கள் .அவர்கள் ஒருபோதும் கைகளைக் கட்டமாட்டர்கள்.தலை தாழ்ந்து பேச மாட்டார்கள் அனாவசியமாக பேசி நேரத்தைக் கடத்தமாட்டார்கள். .கண்களைப் பார்த்து தாங்கள் சொல்ல நினைத்தை சுருக்கமாக உறுதியாக பேசுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
   அடுத்து தன்னம்பிக்கை. நம் மீது நாம் கொள்ளும் தன்னம்பிக்கை மட்டுமே நம் வெற்றியைத் தீர்மானிக்கிறது “உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் உங்களது சுய ஆற்றல்களில் நியாயமான நம்பிக்கை வைக்காமல் உங்களால் வெற்றி பெறவோ மகிழ்ச்சியை அனுபவிக்கவோ முடியாது” இது கலாம் ஐயா கூறியது . ஆம்  ஒருவரிடம் மறைந்திருக்கும் எல்லா திறமைகளையும் மற்றும்  ஆற்றலையும் ஒருமுகப்படுத்தி உடலையும் மனதையும் வலுப்படுத்தி வெற்றிக்கு பாதை அமைக்கும் அபார சக்தி கொண்டது தன்னம்பிக்கைதான். 

      நம்முடைய வெற்றிக்குத் தடையாக இருப்பது தாழ்வு மனப்பான்மை தரும் சந்தேகமும் அச்சமும்தான். நான் செய்வது தவறாக போகுமோ?அவரைப் போல என்னால் பேச முடியுமா? எனபது போன்ற அவநம்பிக்கை ஊட்டும் எண்ண்ங்களை தூக்கி எறிந்துவிட்டு செயலில் இறங்குங்கள்.

ஒரு சாதாரணத் துறவியாக இருந்த விவேகானந்தர் எந்த நம்பிக்கையில் இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன் என்று சவால் விட்டார் .ஒன்று அவர் மீது இருந்த தன்னம்பிக்கை அடுத்து இளைஞர்கள் மீது இருந்த நம்பிக்கை.    

    ஆகவே மனதில் தாழ்வுமனப்பான்மை எட்டிப் பார்ப்பதற்கு ஒருபோதும் இடம் தராமல் சாதிக்கத்  தூண்ட வைக்கும் உயர்வான எண்ணங்களையும் சிந்தனை களையும் உள்ளத்தில் பதிய வைத்து நீங்களும் சாதனையாளராக மாறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com