நாம் ஆசைப்படும் வாழ்க்கையை அடைய என்ன செய்யலாம்?

நாம் ஆசைப்படும் வாழ்க்கையை அடைய என்ன செய்யலாம்?

ம்முடைய ஆழ்மனதில் உருவாகி, மேலும் மேலும் சேர்ந்து தேங்கும் எண்ணங்களே செயல்களாக மாறி, பழக்கங்களாக உருவெடுக்கின்றன. பழக்கங்கள் உருவாக்கிவிட்டால் அவற்றை உடைப்பதோ மாற்றுவதோ மிகக் கடினமாகிப் போகும். இதனால் நமது சூழ்நிலைகள் பாதிக்கப்படும். அதனால் சூழலை மாற்ற, பழக்கத்தை மாற்ற வேண்டும். பழக்கம் மாற எண்ணங்களை மாற்றியாக வேண்டும்.

 1. முதலில் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். உதாரணமாக உங்களுக்கு எந்த மாதிரியான வேலை வேண்டும், எந்த மாதிரியான வீட்டில் குடியிருக்க விரும்புகிறீர்கள் என்று தெளிவாக தெரியவேண்டும்.

2. விரும்பியதை அடைய எடுக்கும் முயற்சிகளைப் பட்டியலிடுங்கள். அதற்காக உழைக்கத் தயாராகுங்கள். 

3. ‘நான் சோம்பேறி, செயலற்றவன்’ என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறியுங்கள். ‘நான் சுறுசுறுப்பானவன். செயல் திறம் மிக்கவன்’  என்ற புதிய எண்ணத்தை அழுத்தமாக மனதில் பதிய வைக்கவும்.

4. அந்த புதிய எண்ணத்தை செயலாக்கி, பழக்கம் ஆக மாற்றவும். எப்போதேல்லாம், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

5. நிலைத்தன்மையுடனும் உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் அந்தப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு சுய பரிந்துரை தேவை.

‘எனது தற்போதைய நிலைமை மாற நான் விடாப்பிடியுடன் முயல்கிறேன்’ என தனக்குத்தானே சொல்லிக்கொள்ள வேண்டும்

6. உங்களுடைய லட்சியங்களையும் ஆசைகளையும் பகிர்ந்துகொள்ள அதற்கேற்ற நட்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும். எப்போதும் எதிர்மறையாக பேசுபவரிடமிருந்தும், பிறரைப் பற்றி குறை கூறுபவரிடமிருந்தும் விலகியே இருங்கள். அந்த மாதிரி நபர்களிடம் பழகினால் அவர்களின்  கெட்ட எண்ணங்கள் உங்களை ஆட்சி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் ஆசைப்படும் வாழ்கையை மிக்க விரைவில் அடையலாம்.

‘எனக்கு நானே ராஜா’ என்று ஆனந்தமாகப் பாடியபடியே நீங்கள் வாழ ஆரம்பிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com