
வெற்றியை விரும்பாதவர்களும் உண்டா? என்ன செய்தால் வெற்றியை ருசிக்கலாம் ? இதோ ஆன்றோரின் அனுபவ மொழிகள்.
1. செயலில் வெற்றிபெற, இலக்கை நோக்கிய ஒரே எண்ணத்துடனான முழு ஈடுபாட்டினை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்
2. எவனொருவன் அடிக்கடி சிரித்து, அதிகமாக நேசித்து, நல்ல வாழ்க்கையினை வாழ்ந்தானோ, அவனே வெற்றிபெற்ற மனிதனாகிறான்.
3. இந்த உலகத்தில் நாம் அனைவரும் பயணிகள்; நமது பயணத்தில் நாம் கண்டறியக்கூடிய சிறந்த விஷயம் நேர்மையான நண்பர்களே.
4. கோழைகளுக்கு இந்த உலகில் இடமில்லை.
5. உங்கள் அச்சத்தை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் உங்கள் தைரியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
6. ஒவ்வொரு நாளையும் அறுவடைக்கான நாளென்று மதிப்பிடாதீர்கள், ஒவ்வொரு நாளும் விதைப்பதற்கான நாளென்று எண்ணுங்கள்.
7. துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது.
8. இயற்கையின் ஒழுங்கை நம்புங்கள். நீங்கள் உண்மையான நம்பிக்கை வைத்திருக்கும் விஷயங்கள் எப்போதும் நல்லபடியாகவே நடக்கும்.
9. நடந்தவற்றை ஏற்றுக்கொள்வதே துரதிரஷ்டத்தின் விளைவுகளை எதிர் கொள்வதற்கான முதல் படி.
10. அவநம்பிக்கை பலவீனத்திற்கு வழிவகுக்கிறது; நம்பிக்கை ஆற்றலுக்கு வழிவகுக்கிறது.