நறுக்...சுருக்...நாசூக்கு...

நறுக்...சுருக்...நாசூக்கு...

ண்மையில் என் நெருங்கிய தோழி தொலைபேசியில்... இவ்வளவு வயசாகியும் யாரிடம் எப்படி பேசணும்னு தெரியலை. எது ஒண்ணு சொன்னாலும் அதை தவறாக புரிந்து கொள்ளும் உறவுகளுக்கு மத்தியில்... நான் கடந்து அல்லாடுகிறேன். என் நிம்மதியே போச்சு... என புலம்பி அழுதாள். இப்படி நம்மைச் சுற்றி பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள். இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக் கொள்கிறோம்.

ஆனால், எத்தனை வயது ஆனாலும் எப்படி பேச வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்வது இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவளுக்கு சொன்னதை.... மற்றவர் களுக்கும் சொல்லலாமே என்று யோசித்ததன் விளைவே இந்த பகிர்வு.

எந்த பிரச்னை என்றாலும் பேசி தீருங்கள்...பேசியே வளர்க்காதீர்கள்.

சம்பந்தபட்ட நபர்களிடம் நேராக பேசுங்கள்... ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

நீங்க சொல்ற விஷயத்தில் உறுதியாக இருங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள்.

நீங்களே பேசிக் கொண்டிராமல் எதிர்த்தரப்பையும் பேச விடுங்கள். அவர்கள் சொல்ல வருவதை கவனியுங்கள். எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும்னு நீங்களே பாருங்கள்.

எந்த பிரச்னையும் தள்ளிப் போடாமல், நேரத்தைக் கடத்தாமல் பேசி முடியுங்கள். இல்லை... அது தானாகவே தான் முடியுமென்றால், வேறு வேலையைப் பார்க்க ‌சென்று விடுங்கள்.

எப்பவுமே என்ன தீர்வு இதற்கு என்று பாருங்கள். தர்க்கத்தை விரும்பாதீர்கள்.

அவர்களிடம் பேசி விளக்கம் பெறுங்கள். அதை விட்டு விட்டு விரோதம் பார்க்காதீர்கள்.

சங்கடமாக இருந்தாலும், எது சத்தியமோ, எது உண்மையோ அதையே பேசுங்கள்.

இன்னதுதான் விஷயம் ன்னு க்ரிஸ்பா சொல்லுங்க.

நம் மீது அன்பைப் பொழிந்த அல்லது அன்பு செலுத்திய நிறைய பேர் இன்று நம்மிடையே இல்லை அப்படி இருக்கும் பொழுது ஏன் மற்றவர்களிடம் நாம் விரோதம் பார்க்கவேண்டும்.

சில நண்பர்கள் உறவுகள் பிரிந்து போனதையும்... சில நண்பர்கள் உறவுகள் நம்மை விட்டு பிரிந்து போனதையும் இயல்பாய் எடுத்துக்கொள் தோழி.

சிலபேர் அவர்கள் ஆசையாய் நினைத்த விஷயங்கள் கை கூடாததாலும், கொஞ்சமும் நினைத்தே பார்த்திராத சில விஷயங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடந்தேறியதாலும் அவர்களின் மனம் , வாக்கு, செயல் மூன்றிலும் மாற்றம் ஏற்பட்டு இருக்கும். அதை நாம் புரிந்து கொள்வோம். வீண்வார்த்தைகள் விடவேண்டாம்.

முடிந்தவரை பிறரிடம் பேசும் நேரத்தை தவிர்த்து புத்தகங்களை வாசி... இயற்கையை நேசி... இனிய இசையைக் கேளு... இறைவனை பிரார்த்தனை செய்... என்றேன்.

உன்னிடமுள்ள தனித்திறமை என்னவென்பதை கண்டுகொள். அதை நோக்கி உன் பயணத்தை செலுத்து.

பேசுவது ஒரு கலை பேசாமல் இருப்பது அதைவிட பெரிய கலை என்பதை உணர்ந்துகொள். சில நேரங்களில் மௌனத்தை பேச விடுவது சாலச் சிறந்தது.

அப்படியே உனக்கு கண்டிப்பாக யாரிடமாவது பேச வேண்டும் என்று தோன்றினால்  உனக்கு பிடித்த இறைவனை மனதில் நிறுத்தி அவரிடம் நீ நினைப் பவற்றை எல்லாம் பேசு. மனம் புத்துணர்ச்சி பெறும்.

மொத்தத்தில் நறுக்குன்னு சுருக்குனு நாசூக்கா பேச கற்றுக்கொள். அப்புறமென்ன எல்லோர் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்வாய் என்றேன்.

அன்பான பேச்சு,

கனிவான பார்வை,

ஆறுதலாக ஒரு அணைப்பு...

மனம் கவர்ந்தவர்களிடம் ஒவ்வொரு மனதும் எதிர்பார்ப்பது என்னவோ இதைத்தான். இல்லையா நட்பூக்களே!

ஆல் த பெஸ்ட்.!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com