
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு -1 கப்
பயத்தம் பருப்பு-1 பிடி
நெய் - 1 கரண்டி
வெல்லம் -1/4 கிலோ
பால் -1 டம்ளர்
ஏலக்காய் - ஒரு சிட்டிகை
முந்திரி -10
செய்முறை:
அடுப்பில் வாணலியில் போட்டு நெய்விட்டு, கடலை பருப்பையும் பயத்தம் பருப்பையும் நன்றாக வறுத்துக்
கொள்ளவும் . தண்ணீரை விட்டு நன்றாக வெந்த பின் வெல்லத்தைப் போடவும். நெய்யில் முந்திரியை வறுத்துப்போடவும். ஏலக்காயை தூவி ஆறியதும் பால் விட்டு இறக்கவும்.
தேவையான பொருட்கள்:
காராமணி -1 கப்
எண்ணெய் -1ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கடுகு -1 ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
இட்லி மிளகாய் தூள்-1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
கருவேப்பிலை
பெருங்காயம்
செய்முறை:
வெறும் வாணலியில் காராமணியை வறுத்து, பிறகு உப்பு போட்டு வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, கடுகு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், இஞ்சி, இட்லி மிளகாய் பொடி போட்டு நன்றாக வதக்கிக் வெந்த காராமணியைஅதில் போட்டு நெய்விட்டு நன்றாகக் கிளறி கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு இறக்கவும்.