
தேவையான பொருட்கள் :
அரிசி - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
முந்திரிபருப்பு -10
இஞ்சி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 50 கிராம்
செய்முறை :
அரிசி பயத்தம்பருப்பு இரண்டையும் இளஞ்சிவப்பாக வறுத்து கொள்ளவும். பிறகு நன்றாகக் களைந்து 3 டம்ளர் தண்ணீர் விட்டு, மிளகு சீரகம் இஞ்சி உப்பு நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு அனைத்தையும் போட்டு குக்கரில் வைத்து நன்றாகக் குழைய வேகவிட்டு இறக்கவும்.!!!
தேவையான பொருட்கள்:
வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப் கடுகு - 1 ஸ்பூன்
எண்ணெய் - தாளிக்க
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
துருவிய தேங்காய் - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 10
உப்பு - தேவைக்கேற்ப
இட்லி மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
செய்முறை:
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் நன்கு ஊறவைத்து கொள்ளவும். மறுநாள் அதை நன்கு களைந்து சுத்தம் செய்து, குக்கரில் தண்ணீருடன் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு , கடுகு , மிளகாய் வற்றல், பெருங்காயம் கருவேப்பிலை இவற்றை தாளித்து வெந்த கொண்டக்கடலையை போட்டு ,இட்லி மிளகாய் பொடியை தூவி , தேங்காய் துருவலையும் போட்டு கிளறி இறக்கிவிடவும்.!!!