
தேவையான பொருட்கள் :
பச்சரிசி -1கப்
காய்ச்சியபால் - 5டம்ளர்
வெல்லம்- 2 கப்
ஏலக்காய்- ஒரு சிட்டிகை
நெய் -4 ஸ்பூன்
முந்திரி - 10
செய்முறை:
அடுப்பில் வாணலியை போட்டு பச்சரிசியை , சிவக்க வறுத்துக் கொள்ளவும். 2 டம்ளர் பால் விட்டு குக்கரில் நன்கு வேகவிடவும். நன்கு வெந்ததும் வெல்லத்தை பாகு வைத்து வடிகட்டி ஒன்றாக கிளறி நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து போடவும் . ஏலக்காய் பொடியை தூவி இறக்கவும்.
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை -1 கப்
கடுகு -1 ஸ்பூன்
எண்ணெய்-2 ஸ்பூன்
நெய் -1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
துருவிய தேங்காய் - 1/4 கப்
கருவேப்பிலை
பெருங்காயம்
செய்முறை:
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் நன்கு களைந்து , உப்பு போட்டு குக்கரில் வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு ,வெந்த கொண்டைக்கடலையை பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி நெய் விட்டு இறக்கவும்.