பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை.

பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை.

தேவையானவை:

பச்சரிசி மாவு – 2 கப்

பாசிப்பருப்பு – ¼ கப்,

வெல்லம் – ¼ கிலோ,

தேங்காய் துருவல் – ½ கப்,

ஏலக்காய் – 5.

செய்முறை:

வெல்லத்தை பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும். பாசிப்பருப்பை வாணலியில் போட்டு மிதமான தீயில் சிவக்க வறுக்கவும். ஏலக்காயை நசுக்கிக்கொள்ளவும். பின்பு மாவில் தேங்காய் துருவல், பருப்பு, ஏலக்காயை சேர்த்து நன்கு கலந்துவிடவும். பிறகு வெல்லப்பாகை மாவில் தேவையான அளவு விட்டு பூரி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். பின் அதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாய் எடுத்து நான்கு விரல் பதியும் கொழுக்கட்டைகளாய் பிடித்து, இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சத்தும் சுவையும் நிறைந்த பிடி கொழுக்கட்டை தயார்.

ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com