‘கிரேவி’கள் செய்யும்போது கவனத்தில் கொள்ள 8 டிப்ஸ்:

‘கிரேவி’கள் செய்யும்போது கவனத்தில் கொள்ள 8 டிப்ஸ்:

1.ப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள கிரேவி செய்யும் போது முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சிறிதளவு சர்க்கரையை போட்டு கரைத்து பொன்னிறமாக்கி கொள்ள வேண்டும் பின் வழக்கம் போல் செய்தால் கிரேவி நல்ல பொன்னிறமாக இருக்கும்.

2.கிரேவி வகைகளில் காரம் அதிகமானால் சிறிதளவு தக்காளி வெங்காயத்தை வதக்கி கொதிக்க வைத்து அதை காரமான கிரேவியுடன் சேர்த்தால் சரியாகிவிடும்.

3.க்காளியை நன்றாக வதக்கிய பிறகு நீர் சேர்த்து தளதளவென்று கொதிக்க விட்டால் கிரேவி கெட்டியாக வரும்.

4.நார்த் இந்தியன் கிரேவி செய்யும்போது, புட் கலர் சேர்க்காமல் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி செய்தால், கிரேவி சிவப்பு நிறமாக வரும். இறக்கி விடும் முன் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் சுவை ஜோராக இருக்கும்.

5. சைடு டிஷ்க்கு வெள்ளை நிற கிரேவி தயாரிக்க முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு போன்றவற்றை மசாலாவுடன் சேர்த்து அரைத்து கிரேவி செய்யலாம்.

6. நெய் சேர்த்து கிரேவி செய்வதற்கு பதிலாக வெண்ணை சேர்த்து செய்தால் மணமும் சுவையும் வேற லெவல்!

7. கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவி அல்லது குழம்பில் தண்ணீர் சேர்க்க வேண்டி இருந்தால் சூடான நீரை சேர்க்கவும். சுவை மாறாமல் இருக்கும்.

8. ன்னீர் பட்டர் மசாலா போட்டு கிரேவியில் உப்பு அதிகமானால் வேகவைத்த உருளைக்கிழங்குடன் சிறிதளவு பிரெஷ் கிரீமை சேர்க்க, சுவை கூடும். உப்புத் தன்மையும் குறைந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com