அசத்தலான பானி பூரி: வீட்டிலேயே செய்யலாம் வாரீர்!

அசத்தலான பானி பூரி: வீட்டிலேயே செய்யலாம் வாரீர்!

ரோட்டோரங்களில் தள்ளுவண்டிகளில் பானி பூரி விற்றுக் கொண்டிருப்பதை பார்த்தால் குழந்தைகள் சட்டென சடன் பிரேக் போட்டு அப்பா அம்மாவிடம் அடம்பிடித்தாவது பானி பூரி வாங்கிச் சாப்பிடுவர். பெரியவர்கள் பலரும் ரெகுலராக பானிபூரி சாப்பிடுவதை  பார்த்திருப்போம். இன்னும் சிலருக்கு சாப்பிட ஆசை. ஆனால், ரோட்டோரக் கடைகளின் சுத்தம், சுகாதாரம் பற்றிக் குழப்பமும் சஞ்சலமும் உண்டு.

மிகச் சுலபமாக, குறைந்தசெலவில்  வீட்டிலேயே பானி பூரி செய்து நாமும் சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் கொடுத்து அசத்தலாம். டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் மளிகைக் கடைகளிலும் கூட தற்போது பானி பூரி செய்ய தேவையான சிறிய அப்பளம் சைஸ் ரெடிமேடு பூரிகள் கிடைக்கின்றன.  அவற்றில் சுமார் 80 பூரிகள் வரை செய்யலாம். ஒரு பாக்கெட் விலை முப்பது ரூபாய் தான்.

தேவையான பொருள்கள்;

ரெடிமேட் பானி பூரி-  ஒரு பாக்கெட்

உருளைக்கிழங்கு - அரை கிலோ

புதினா - ஒரு கட்டு

இஞ்சி - ஒரு பெரிய துண்டு

பூண்டு - பத்து பெரிய பற்கள்

புளி-  எலுமிச்சை அளவு  

பெரிய வெங்காயம் -  ஒன்று

கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் - தலா ஒரு ஸ்பூன்

உப்பு-  தேவையான அளவு

உருளைக்கிழங்கு மசாலா;

செய்முறை; முதலில் உருளைக்கிழங்குகளைக் கழுவி வேக வைத்து தோல் உரித்து, மசித்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அறிந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து, வெங்காயம் போட்டு வதக்கி,  மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு போட்டு வெந்த உருளைக்கிழங்கையும் போட்டு பிரட்டி எடுக்கவும். உருளைக்கிழங்கு மசாலா ரெடி.

புளி, புதினா பானி:

ரு பாத்திரத்தில் எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து, மண் இல்லாமல் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். மிக்ஸியில் வெட்டி வைத்த இஞ்சி, பூண்டு விழுதை நைசாக அரைத்துக் கொள்ளவும், புதினாவை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் நன்கு அலசி விட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதனுடன் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையையும் ஜல்லடையில் வடிகட்டிக் கொள்ளவும் இப்போது புளித் தண்ணீர், இஞ்சி பூண்டு கலவை, புதினா தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பானி பூரிக்கான  தண்ணீர் ரெடி.

வாணலியில் எண்ணெய் ஊற்றி தேவையான அளவு பூரிகளை பொரித்து எடுக்கவும். பூரியை எடுத்து பெருவிரலால் அழுத்தி ஓட்டை போட்டு அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து புதினா, புளிப் பாணியை ஊற்றி சாப்பிடவும். குழந்தைகள் மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்பர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com