அவல் லட்டு
அவல் லட்டு

சுவையான சத்தான அவல் லட்டு!

தேவையான பொருட்கள்:
அவல் 2 டம்ளர்
வெல்லம் 1 டம்ளர்
முந்திரி 10
திராட்சை 10
ஏலக்காய் பொடி ஒரு டீஸ்பூன்
பாதம் 5

வெறும் கடாயில் அவல் சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்து கொள்ளவும்.

அதனை மிக்ஸியில் ஒரிரு சுற்றுக்கள் சுற்றி கரகரப்பாக உடைத்து கொள்ளவும்.

AVAL LADDU
AVAL LADDUகடாயில் சிறிது நெய் சேர்த்து முந்திரி பாதம் திராட்சையை சிவக்க வறுத்து கொள்ளவும்.

கடாயில் ஒரு டம்ளர் வெல்லத்தை பொடித்து அரை டம்ளர் நீரில் கலந்து ஒரு கம்பி பாகு காய்ச்சவும்.

காய்ச்சியதும் பொடித்த அவலை அதில் கொட்டி கிளறி ஏலக்காய் தூள் சேர்ந்து சுருள கிளறி விடவும்.

பின்னர் வறுத்த முந்திரி பாதம் திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.

கை பொறுக்கும் பதம் ஆறியதும் சிறிது நெய் தடவி லட்டு பிடித்து கொள்ளவும்.

இது மிகவும் செய்வதற்கு எளிதான, சத்தான, சுவையான ஒரு இனிப்பு வகை. வெல்லமும் அவலும் உடலுக்கு வலுவைத்தரும். மிக எளிமையாக தயாரிக்ககூடிய சத்தான இந்த இனிப்பை மாலை நேரத்து ஸ்நாக்ஸாக  தயாரித்து மகிழ்வுடன் குழந்தைகளை அசத்தலாம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com