
தேவையான பொருட்கள்:
அவல் – ½ லிட்டர், பாசிப் பருப்பு - 200 கிராம், அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன், கீரை (அரிந்தது) – ½ கப். முள்ளங்கி, காரட் - 1 (பெரியது), வெங்காயம் - 2 (பெரியது), இஞ்சி - சிறு துண்டு, மிளகாய் வற்றல் - 5, பச்சை மிளகாய் – 6, தேங்காய்த் துருவல் – ½ கப். கொத்துமல்லி - 1 கட்டு (சிறியது), எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெறும் வாணலியில் அவலை இரண்டு நிமிடம் வறுத்து, மிக்ஸியில் ரவையாகப் பொடிக்கவும். பாசிப் பருப்பை தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவிடவும். மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், ஒரு வெங்காயம் மூன்றையும் அரைத்து விழுதானதும், ஊறிய பாசிப் பருப்பைச் சேர்த்து கரகரவென்று அரைத்தெடுக்கவும். இஞ்சி, முள்ளங்கி, கேரட் அனைத்தையும் துருவிக்கொள்ளவும். ஒரு அடி கனத்த பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் வைத்து, கொதித்ததும். கீரை, பாசிப் பருப்பு விழுது இவற்றோடு, துருவி வைத்துள்ள அனைத்தையும் சேர்க்கவும்.. பின் அரிசி மாவு, அவல் இரண்டையும் சிறிது சிறிதாக சேர்த்துக் கட்டியின்றி கிளறவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
மீதமுள்ள ஒரு வெங்காயத்தை எண்ணெயில் பொன்னிறமாய் வதக்கி, அரிந்த கொத்துமல்லி, தேங்காய்த் இவற்றோடு மாவில் சேர்க்கவும். மாவு துருவல் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
இந்த அவல் கலவையைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூவரசு இலை அல்லது வாழையிலையில் வட்டமாகத் தட்டி ஆவியில் வேகவிடவும். எண்ணெய் அதிகம் தேவைப்படாத, இந்த மிருதுவான அவல் வடை அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு பரிபூரண உணவாகும்.
-ரேவதி, சென்னை – 61