பட்டர் மில்க் ரவா பாத்!

பட்டர் மில்க் ரவா பாத்!

தேவையான பொருட்கள்: ரவை 1 கப், திக்கான மோர் 1½ கப், பொடிசா நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்து அரை கப், நெய் ¾ டேபிள்ஸ்பூன், எண்ணை ¾ டேபிள்ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், பொடிசா நறுக்கிய கேரட், பீன்ஸ் பச்சைப் பட்டாணி மூன்றும் சேர்த்து 1 கப், முந்திரி 12, உப்பு, கறிவேப்பிலை, மல்லித் தழை தேவையான அளவு.

செய்முறை: கேரட், பீன்ஸ் பச்சைப் பட்டாணி மூன்றையும் தண்ணீர் விட்டு, குழையாமல், பதமாக வேகவைத்து எடுக்கவும். ஒரு வாயகன்ற கடாயை அடுப்பில் ஏற்றி நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றவும். சூடானதும் கடுகை போடவும். வெடித்ததும் முந்திரி சேர்க்கவும். பொன்னிறமாகையில் வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் வெந்த காய்களை நீரை வடித்துப் போட்டு நன்கு கலந்து விடவும். பிறகு ரவையை போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் கிண்டவும். பின் பட்டர் மில்க்கை ஊற்றி நன்கு கிளறி, கொதி வரும்போது உப்பு,  கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு கடாயை ஒரு தட்டு போட்டு மூடிவிடவும். ஐந்து நிமிடம் கழித்து திறக்கவும்.

பட்டர் மில்க் ரவா பாத்  வெள்ளை  நிறத்தில்  நன்கு வெந்து உதிர் உதிரா வந்திருக்கும். கீழே இறக்கி வைத்து மல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையான சத்தான காலை உணவு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com