இந்த விஷயங்களை செய்தாலே, ஊறுகாய் கெட்டுப்போகாமல் தரமானதாக இருக்கும்!

இந்த விஷயங்களை செய்தாலே, ஊறுகாய் கெட்டுப்போகாமல் தரமானதாக இருக்கும்!

அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி நமது சாப்பாட்டுடன் தொட்டுக்கொள்ள எடுத்துக்கொள்ளும் சைடிஷ்களில் ஊறுகாய்களும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிலும் ஊறுகாயை வீட்டிலேயே தயார் செய்பவர்களும் நிறைய பேர் உள்ளனர். அப்படி நாம் ஊறுகாய் செய்யும்போது சில விஷயங்களை கவனித்துச் செய்தால், ஊறுகாய் கெட்டுப்போகாமல் தரமானதாக இருக்கும்.

*         ஊறுகாய் தயாரிக்க தரமான, புதிய காய்களையே வாங்க வேண்டும். பாதி பழுத்த நிலையிலுள்ள காய்களையே பயன் படுத்த வேண்டும்.

*         அந்தந்த சீசனில் கிடைக்கும் காய், பழங்களை வாங்கினால் தரமாகவும், விலை மலிவாகவும் இருக்கும்.

*         ஊறுகாய் வைக்கும் பீங்கான் ஜாடிகள், கண்ணாடி பாட்டில்கள், காற்றுப் புகாமல் மூடி வைக்கத் தக்கதாக இருக்க வேண்டும்.

*         எவர்சில்வர், பிளாஸ்டிக், அலுமினியப் பாத்திரங்களில் ஊறுகாயை வைத்தால், ஊறுகாயும் கெட்டுப் போகும், பாத்திரங்களும் ஓட்டையாகி விடும்.

*         எந்த ஊறுகாயானாலும், அதில் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்தால் கெடாமல் இருக்கும்,

*         கல் உப்பைத்தான் பயன்படுத்த வேண்டும்.

*         ஊறுகாய்க்குத் தாளிக்கும் போது, சிறிதளவு எள்ளை வறுத்து, பொடித்து சேர்த்தால், வாசனையாகவும் இருக்கும், கெட்டுப் போகாமலும் இருக்கும்.

*         ஊறுகாய் ஜாடியின் உட்புறத்தை சூடான எண்ணெயில் நனைத்த துணியினால் துடைத்து விட்டு, ஊறுகாய்களைப் போட்டால், பூசணம் பிடிக்காது.

*         மாங்காய், எலுமிச்சை இவற்றோடு, பாகற்காய், மற்ற காய்களிலும் ஊறுகாய் தயாரிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com