காலிஃப்ளவர் ரெசிபிஸ்!

காலிஃப்ளவர் ரெசிபிஸ்!

ஹாட் காலிஃப்ளவர் க்ராக்கெட்ஸ்

காலிஃப்ளவர் - ஒன்று உருளைக்கிழங்கு- 2  துருவிய சீஸ்-2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய், பூண்டு- தலா4 இஞ்சி - ஒரு துண்டு, மைதா மாவு நான்கு டேபிள் ஸ்பூன், ப்ரெட்தூள்- சிறிதளவு, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.

காலிஃப்ளவரை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, இரண்டு நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும். உருளைக்கிழங்கை வேக விட்டு தோலை நீக்கிவிட்டு நன்கு மசிக்கவும் . பச்சை மிளகாய், இஞ்சி ,பூண்டை ஒன்றாக (நைசாக )அரைக்கவும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து அத்துடன் இரண்டு டேபிள்ஸ்பூன் மைதா சேர்த்து விரும்பிய வடிவம் ஆக்கவும்.(சதுரம், வட்டம், இதய வடிவம்) மீதமுள்ள இரண்டு டேபிள் ஸ்பூன் மைதாவை சற்று நீர்க்கக் கரைத்து அதில் காலிஃபிளவர் க்ராகெட்ஸை தோய்த்து பிரெட் தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்து... தக்காளி சாஸூடன் அன்பாக பரிமாறவும். கலக்கல் சுவையில் அசத்தும் இந்த காலிஃப்ளவர் க்ராக்கெட்ஸ்.

***********************************

ப்ப பாரு ப்ரட் பாம்பே  டோஸ்ட் செய்து போர் அடிக்கிறீங்கன்னு உங்க மேல குற்ற பத்திரிகை சுமத்தறாங்களா? பிரட்டில் காலிஃப்ளவரை ஸ்பிரெட் பண்ணிக் கொடுத்து பாருங்க...

அப்புறம் இதற்காகவே பிரட்டை கேட்பார்கள் உங்கள் வீட்டில்.

காலிபிளவர் -பாதி,  வெங்காயம், தக்காளி- தலா இரண்டு

பூண்டு- நாலு பற்கள்

ப்ரெட்-1, காய்ந்த மிளகாய் -ஐந்து,  சீஸ்-மூன்று துண்டுகள்.

உப்பு , எண்ணெய் -தேவையான அளவு

காலிஃப்ளவரை துருவி (சுத்தம் செய்து கழுவிய பின்) வைக்கவும்.

வெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாயை ஒன்றாகவும், தக்காளியை தனியாகவும் அரைத்து வைக்கவும் . சீஸை துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி வெங்காய விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு காலிஃப்ளவர் துருவலை சேர்த்து வதக்கி ,தக்காளி சாறை சேர்க்கவும். தக்காளி சாறு சிறிது பற்றி கெட்டி யானதும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பிரட் ஸ்லைஸ் களின் ஓரங்களில் நீக்கிவிட்டு குறுக்காக முக்கோண வடிவத்தில் வெட்டவும். அதன் மேல் காலிஃப்ளவர் மசாலாவை தடவி, துருவிய சீஸை தூவி, சூடான தவாவில் 5 நிமிடம் வைத்து எடுத்துச் சுட ச்சுட பரிமாறவும்.

***********************************

ங்க வீட்ல இதெல்லாம் வேலைக்கே ஆகாது.. தோசை தான் எப்பவும்.. என்பவர்களா நீங்கள்! இதோ உங்களுக்காக, ஆவி பறக்கும் காலிஃபிளவர் மசாலா ரோஸ்ட்...

தோசை மாவு- இரண்டு கப், சின்ன காலிஃப்ளவர் -ஒன்று வெங்காயம் , தக்காளி - தலா இரண்டு  இஞ்சி, பூண்டு விழுது -இரண்டு டீஸ்பூன். 

தேங்காய் துருவல்- ஒரு டேபிள் ஸ்பூன், முந்திரி- 8

தனி மிளகாய் தூள்- இரண்டு டீஸ்பூன் 

கடுகு, பெருஞ்சீரகம் -தலாஅரை டீஸ்பூன் 

உப்பு எண்ணெய் -தேவையான அளவு

காலிஃப்ளவரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி உப்பு கலந்து நீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கவும் .தேங்காய் துருவலுடன் முந்திரி சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும். வானொலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயை விட்டு காய்ந்ததும் கடுகு பெருஞ்சீரகம் தாளித்து வெங்காயம் சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, காலிஃப்ளவர் ,இஞ்சி பூண்டு விழுது ,தனி மிளகாய்த்தூள், சேர்த்து பச்சை வாடை போக வதக்கி கடைசியில் தேங்காய், முந்திரி விழுதை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

மாவை மெல்லிசா தோசைகளாக ஊற்றி அதன் மேல் இந்த காலிபிளவர் மசாலாவைத் தடவி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு மடித்து எடுத்தால் கம கம மணத்துடன் காலிஃப்ளவர் மசாலா ரோஸ்ட் உங்களை பார்த்து கண்ணடிக்கும்.

மாவை சற்று கனமாக ஊற்றி (ஊத்தப்பம் போல்) அதன் மீது பரவலாக மசாலாவை தடவி மடிக்காமல் திருப்பி போட்டு எடுத்தால் மெத்தென்றகாலிஃப்ளவர் ஊத்தப்பம் ரெடி.

***********************************

தெல்லாம் செய்ய முடியாதுப்பா! அலுவலகத்துக்கும் போய்ட்டு வந்து, வீட்டில வந்து செய்வதற்கு சுலபமா இதமா, சுலபமா செய்ற மாதிரி ஒரு ரெசிபி சொல்லுங்கன்னு நீங்கள் முணுமுணுப்பதுகாதில் விழுகிறது... சொல்லிட்டா போச்சு. 

கிரிஸ்பி காலிஃப்ளவர் பக்கோடா

காலிஃப்ளவர் -ஒன்று,  கடலை மாவு -அரை கப்,  மிளகாய் தூள்- அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் -கால் டீஸ்பூன், உப்பு , எண்ணெய் தேவையான அளவு.

காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கிக் கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டு நீரை வடிக்கவும் .இதனுடன் கடலை மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்து ஒன்றாக கலந்து சூடான எண்ணெயில் பிசறினாற் போல் போட்டு பொரித்து எடுக்க... அசத்தலான சுவையில் காலிஃப்ளவர் பக்கோடா உங்கள் கைகளில்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com